Home வணிகம்/தொழில் நுட்பம் 2015-ல் ஐபோன் 6 சி வெளியாகலாம்!

2015-ல் ஐபோன் 6 சி வெளியாகலாம்!

542
0
SHARE
Ad

iPhone 6 launchகோலாலம்பூர், டிசம்பர் 25 – 2014-ம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனத்தின் வர்த்தக வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தது அந்நிறுவனம் வெளியிட்ட ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ் திறன்பேசிகள் ஆகும். பயனர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிய ஐபோன் 6-ன் அளவினை, 4 அங்குலங்களாக குறைத்து, எதிர்வரும் 2015-ம் ஆண்டில் வெளியிட ஆப்பிள் தீர்மானித்து இருப்பதாக ஆருடங்கள் கூறப்படுகின்றன.

ஆப்பிள் நிறுவனத்தின் இந்த முயற்சிக்கு ஐபோன் 5சி-ன் வர்த்தகமும் ஒரு காரணம் என்று கூறப்படுகின்றது. ஐபோன் 6 திறன்பேசிகள் வெளியான போதும் வாடிக்கையாளர்கள் மத்தியில் ஐபோன் 5சி திறன்பேசிகளுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது. அதன் காரணமாகவே ஆப்பிள், ஐபோன் 6-லும் அளவு குறைந்த திறன்பேசிகளை வெளியிட இருப்பதாக தொழில்நுட்ப பத்திரிக்கைகள் ஆருடங்கள் கூறுகின்றன.

இந்த புதிய திறன்பேசிகள் ஐபோன் 6சி அல்லது ஐபோன் 6எஸ் மினி என்ற பெயரில் அடுத்த வருடத்தில் வெளியாகலாம் என்று கூறப்படுகின்றது. இந்த புதிய ஐபோன் 6 சி-ல், ஆப்பிள், ‘கைரேகை உணர்விகள்‘(Fingerprint Sensors) மற்றும் என்எப்சி சிப்‘ (NFC chip) உள்ளிட்ட சில மாறுதல்களையும் மேம்படுத்த இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

முன்னணி நிறுவனங்கள் நடுத்தர மக்களை குறி வைத்து மலிவு விலை திறன்பேசிகளை உருவாக்கி வரும் நிலையில், ஆப்பிளும் பல்வேறு வர்த்தக சந்தைகளின் தேவைகளை கருதி இத்தகைய நடுத்தர விலையிலான திறன்பேசிகளை உருவாக்கும் முடிவில் இறங்கி உள்ளதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.