Home நாடு புத்ரா ஜெயாவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து

புத்ரா ஜெயாவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து

707
0
SHARE
Ad

Putrajayaகோலாலம்பூர், டிசம்பர் 26 – புத்ரா ஜெயாவில் பிரமாண்டமாக நடைபெற இருந்த புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஆயிரக்கணக்கானோர் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால், புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்தாகியுள்ளன.

Adnan Tengku Mansor
தெங்கு அட்னான் தெங்கு மன்சோர்

இந்த அறிவிப்பை கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் வியாழக்கிழமை வெளியிட்டார்.

“புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகையை அதன் ஏற்பாட்டாளர்களான ஏம்பேங் குழுமம் (Ambank Group) வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். இதற்கு ஏற்பாட்டாளர்கள் ஒப்புக் கொள்வார்கள் என நம்புகிறோம்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“கொண்டாட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 3 மில்லியன் ரிங்கிட் தொகையை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவது தொடர்பாக அக்குழுமத்தின் தலைவர் டான்ஸ்ரீ அஸ்மான் ஹஷிமிடம் கலந்தாலோசிப்பேன்,” என்றார் துங்கு அட்னான்.