Home நாடு “இதுவும் கடந்து போகும்-தன்னம்பிக்கையோடு வரவேற்போம்” – விக்னேஸ்வரன் புத்தாண்டு வாழ்த்து

“இதுவும் கடந்து போகும்-தன்னம்பிக்கையோடு வரவேற்போம்” – விக்னேஸ்வரன் புத்தாண்டு வாழ்த்து

984
0
SHARE
Ad

ம.இ.கா தேசியத் தலைவர்,தெற்காசிய நாடுகளுக்கான சிறப்புத் தூதர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரனின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

நமக்கு நாமே எனும் தாரக மந்திரத்தில் இதுவும் கடந்து போகும் என்ற தன்னம்பிக்கையோடு 2022 புத்தாண்டை வரவேற்போம்

இந்தியர்கள் ஒவ்வொருவரும் ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்ளும் மனப்பான்மையில் செயல்படும் ஒரு சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது கண்டு பெருமிதம் கொள்ளும் இவ்வேளையில் நமக்கு நாமே எனும் தாரக மந்திரத்தில் இதுவும் கடந்து போகும் என்ற தன்னம்பிக்கையோடு 2022 புத்தாண்டை வரவேற்போம்.

நாட்டில் 2020-இல் ஏற்பட்டிருந்த கோவிட் 19 பெருந்தொற்று கொஞ்சம் கொஞ்சமாக தணிந்து வரும் நிலையில் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியர்கள் பலரும் உதவி வழங்கியது கண்டு மனம் நெகிழ்ந்தேன். எங்கு பார்த்தாலும் மக்களுக்கு உதவிகள். உணவு, உடை, சமையல் பொருட்கள் என்று வழங்கப்பட்ட சூழல் நமக்குள் இருக்கும் ஒற்றுமையை பிரதிபலிப்பதாக அமைந்தது.

#TamilSchoolmychoice

கோவிட் 19 பெருந்தொற்று ஒருபுறம் கட்டுப்படுத்தப்பட்டு வரும் வேளையில் வெள்ளப் பேரிடர் மக்களை பெருந்துயரத்திற்கு ஆளாக்கியது மனவேதனையை ஏற்படுத்தியது. இந்த சூழலில் இந்தியர்கள் அனைவரும் நமக்கு நாமே எனும் தாரக மந்திரத்தில் இனம்,மதம், மொழி பாராமல் மலேசிய குடும்பமாக இணைந்து அனைவருக்கும் உதவி வழங்கியது நமக்கெல்லாம் பெருமையை ஏற்படுத்தியது.

Orang India Bagus, Kita salute sama orang India எனும் குரல் பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பரவலாக கேட்க முடிந்தது. இந்தியர்களைப் பாராட்டி மலாய்க்காரர்கள் வெளியிட்ட காணொலிகளும் மனதை நெகிழ வைத்தது. இவை அனைத்தும் இந்தியர்களை தலைநிமிரச் செய்துள்ளது. நமக்கு ஒரு துயரம் ஏற்பட்ட நிலையில் நாம் ஒற்றுமையாக செய்த உதவிகள் நம்மை உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது என்றால் அது மிகையில்லை.

இந்த 2022 புத்தாண்டு நாம் நமது சோதனைகள், வேதனைகளை கடந்த ஓர் ஆண்டாக இருக்க வேண்டும். நமக்கு 2021இல் நிகழ்ந்த துயரங்கள் அனைத்தும் 2022இல் கடந்து போகும் என்ற நம்பிக்கையில் நாம் புத்தாண்டை வரவேற்போம். அதேநேரத்தில் ம.இ.காவும் இந்தியர்கள் நலனுக்காக பாடுபடும் என்ற உறுதியோடு அனைவரும் 2022 குபுத்தாண்டை வரவேற்போம்.