Home நாடு “தன்னம்பிக்கையை யாரும் இழக்க வேண்டாம்! முடிவென்ற எதுவும் இல்லை” – சரவணன் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

“தன்னம்பிக்கையை யாரும் இழக்க வேண்டாம்! முடிவென்ற எதுவும் இல்லை” – சரவணன் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

920
0
SHARE
Ad

மனிதவள அமைச்சரும் மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் அவர்களின்
2022 புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

உலக மக்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். மலரும் ஆண்டு நலம் தரும் ஆண்டாக, வளம் பெருகும் ஆண்டாக, இயற்கையின் ஆசியோடு மலர எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம்.

2022 அனைவருக்குமே ஒரு புதிய விடியலைத் தரும் என எதிர்பார்ப்போம். ஆகக் கடைசியாக மக்களை வருத்திய வெள்ளப் பேரிடர் இனி ஒரு போதும் வராமல் இருக்க வேண்டும்.

2020-இல் தொடங்கிய தொற்று இன்னும் உலகமக்களை உலுக்கி வருகிறது. 2022-இல் இந்த கொரோனா தொற்று முற்றிலும் நீங்கி நாம் மீண்டும் உற்சாகமான நடைமுறை வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும்.

#TamilSchoolmychoice

வெள்ளப் பேரிடரால் பொருளாதார ரீதியாகப் பலரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அடிப்படை வசதிகளையும், அத்தியாவசியத் தேவைகளையும் இழந்து அல்லல் பட்டு வருகிறார்கள். ஆக ஒட்டு மொத்த மலேசியர்களும் சுகாதாரப், பொருளாதார ரீதியாக மேன்மையடைந்து வெற்றிநடை போட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

நம்பிக்கையை யாரும் இழக்க வேண்டாம். தன்னம்பிக்கையோடு உழைக்க முற்பட வேண்டும். முடிவென்பது எதுவும் இல்லை. ஒரு முடிவில் இன்னொரு தொடக்கம் என்பதை நினைவில் கொள்வோம்.

“சூரியனைக் கண்ட பனிபோல” அனைத்துப் பிரச்சனைகளும் ஒரு முடிவுக்கு வரவேண்டும். 2022-இல் இழந்ததைப் பெற வேண்டும். வாழ்க்கை வளமாகவும், நலமாகவும் இருக்க வேண்டும்.

இந்த எதிர்பார்ப்புகளோடு அனைவருக்கும் மீண்டும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

யாதுமாகி நின்றாய்
எங்கும் நீ நிறைந்தாய்;
தீது நன்மை யெல்லாம் தெய்வ லீலை யன்றோ;
துன்பம் நீக்கிவிட்டாய் தொல்லை போக்கிவிட்டாய்