Home இந்தியா காஷ்மீரில் பாஜகவின் முதல் இஸ்லாமிய எம்.எல்.ஏ.!

காஷ்மீரில் பாஜகவின் முதல் இஸ்லாமிய எம்.எல்.ஏ.!

544
0
SHARE
Ad

ஸ்ரீநகர், டிசம்பர் 25 – சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்ற பெயர் பாஜகவுக்கு இனியும் நீடிக்குமா? என்பது சந்தேகம்தான். ஏனெனில் ஜம்மு, காஷ்மீர் மாநிலத்திலும் அக்கட்சி சார்பில் இஸ்லாமியர் ஒருவர் சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Kashmir-BJP -MLA
அப்துல் கனி கோக்லி

அண்மையில் ஜம்மு, காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இம்மாநிலத்தில் மொத்தம் 87 தொகுதிகள் உள்ளன. இம்முறை பாரதிய ஜனதா சார்பில் 34 தொகுதிகளில் இஸ்லாமியர்களே வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டனர்.

இவர்களில் 25 பேர் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் போட்டியிட்டனர்.

#TamilSchoolmychoice

எனினும் 34 இஸ்லாமிய வேட்பாளர்களில் அப்துல்கனி கோக்லி என்ற ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். இவர் ரசோரி மாவட்டம் கலாகோடே தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்குத் தேர்வாகியுள்ளார்.

இதன் மூலம் காஷ்மீர் மாநில வரலாற்றில் பாஜக சார்பில் வெற்றி பெற்ற முதல் இஸ்லாமிய எம்.எல்.ஏ., என்று பெயர் பெற்றுள்ளார் அப்துல்கனி கோக்லி.

இதற்கு முன் கடந்த 1972ஆம் ஆண்டில் பாரதிய ஜன சங்கம் சார்பில் ஜம்மு கிழக்கு தொகுதியில் ஷேக் அப்துல் ரகுமான் என்ற முஸ்லிம் வேட்பாளர் எம்.எல்.ஏ.வாக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.