Home நாடு திரங்கானு: வெள்ளத்தில் மூழ்கி சிறுமி பலி

திரங்கானு: வெள்ளத்தில் மூழ்கி சிறுமி பலி

607
0
SHARE
Ad

கோலதிரங்கானு, டிசம்பர் 25 – திரங்கானுவில் இரண்டாவது முறையாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் சிக்கி 14 வயது சிறுமி பலியானாள். வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் இங்குள்ள சுங்கை கெசோங் நதிக்கரையோரம் தனது 3 நண்பர்களுடன் நூராஷிடா பகருடின் என்ற அச்சிறுமி நடந்து சென்று கொண்டிருந்ததாகவும், அப்போது கால் தவறி அவர் நதியில் பெருக்கெடுத்த வெள்ளத்தில் விழுந்ததாகவும் திரங்கானு தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அதிகாரி ரோசையா அப்னி ஹஜார் தெரிவித்தார்.

நூராஷிடாவைக் காப்பாற்ற அவரது நண்பர்கள் இருவர் முயன்றபோது, அவர்களும் கிட்டத்தட்ட மூழ்கிப்போக இருந்தனர். எனினும் கிராம மக்கள் இருவரையும் மீட்டனர்.

இதையடுத்து மதியம் 12.40 மணிக்கு நூராஷிடாவின் உடல் அவர் மூழ்கிய இடத்தில் இருந்து 3 மீட்டர் தூரத்தில் கண்டெடுக்கப்பட்டது தாக ரோசையா அப்னி தெரிவித்தார்.

Floods in East Coast 2014
கிழக்குக் கரை மாநிலங்களில் ஒன்றான கிளந்தானின் ரந்தாவ் பஞ்சாங்கில் ஏற்பட்ட வெள்ளத்தின் காட்சிகளுள் ஒன்று
#TamilSchoolmychoice