கோலாலம்பூர், டிசம்பர் 29 – 2014 -ம் ஆண்டை நம்மால் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. காரணம் ஏற்கனவே எம்எச்370, எம்எச்17 என இரண்டு பெரும் விமானப் பேரிடர்களை சந்தித்த மலேசியா அதிலிருந்து மீள்வதற்குள் தற்போது மீண்டும் ஒரு சம்பவத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது.
இந்தோனேசியாவில் இருந்து சிங்கப்பூர் நோக்கிச் சென்ற ஏர் ஏசியா QZ8501 விமானம் 162 பேருடன் மாயமாகிவுள்ளது. தற்போது அதனைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தாலும், அதில் பயணம் செய்த தங்களது உறவினர்களைக் காணாமல் தவிப்பவர்களின் துயரத்தை வார்த்தைகளால் கூறிவிடமுடியாது.
2014-ம் ஆண்டு நிறைவடைய இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.





படங்கள்: EPA