Home உலகம் ஏர் ஆசியா: கடலுக்கடியில் இருக்கலாம்! தேடுதலில் இதுவரை பலனில்லை!

ஏர் ஆசியா: கடலுக்கடியில் இருக்கலாம்! தேடுதலில் இதுவரை பலனில்லை!

480
0
SHARE
Ad

ஜாகர்த்தா, டிசம்பர் 29 – இந்தோனேசியாவின் சுரபயா விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு சென்றபோது மாயமான ஏர் ஆசியா விமானம் கடலில் விழுந்து, அதன் ஆழப் பகுதியில் புதையுண்டிருக்கக் கூடும் என இந்தோனேசிய தேசிய மீட்பு மற்றும் தேடுதல் குழுவின் தலைவர் பம்பாங் சொலிஸ்ட்யோ தெரிவித்துள்ளார்.

Indonesian Navy crew prepare their logistics on the Indonesian warship 'KRI Sultan Hasanuddin-366' for a search and rescue operation as they join in the search for the missing AirAsia plane near Batam Island, Indonesia, 29 December 2014. AirAsia flight QZ 8501, en route from Surabaya to Singapore, was reported missing by Indonesian air authorities on 28 December an hour after take off. Searchers resumed on 29 December, searching land and sea for the AirAsia plane missing in Indonesia with 162 people on board. AirAsia said 155 of the people on board were Indonesians. The others included three from South Korea, and one each from Singapore, Malaysia, France and Britain.  இன்று தொடர்ந்த தேடுதல் பணிகளில் மீட்புக் குழுவினர் பத்தாம் தீவுக்கு அருகில், இந்தோனேசிய போர்க்கப்பலில் இருந்து புறப்பட ஆயத்தமாகும் காட்சி.

ஜாகர்த்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விமானத்தில் இருந்து கடைசியாக பெறப்பட்ட தகவல்கள் மற்றும் ரேடார் விவரங்களை வைத்துப் பார்க்கும்போது, இத்தகைய முடிவிற்கு வர வேண்டியுள்ளதாகக் கூறினார்.

#TamilSchoolmychoice

“இது தொடக்க நிலையில் எழுந்துள்ள அனுமானம் மட்டுமே. எனினும் தேடுதல் பணியின்போது இது தொடர்பாக மேலும் உறுதி செய்ய முடியும். ஆழ் கடலில் உள்ள விமானத்தை மீட்பதற்கான நவீன தொழில் நுட்ப வசதிகள் இந்தோனேசியாவிடம் இல்லை. எனவே தேவைப்படும் பட்சத்தில் பிற நாடுகளிடம் இது தொடர்பில் உதவிகளை கேட்டுப் பெறுவோம்,” என்றார் பம்பாங் சொலிஸ்ட்யோ.

தேடுதல் பணிக்குத் தேவைப்படும் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து வெளியுறவு அமைச்சருடன் கலந்தாலோசித்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இவ்விஷயத்தில் இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இந்தோனேசியாவுக்கு உதவ முன் வந்திருப்பதாகத் தெரிவித்தார்.

pa04542154 Indonesian President Joko Widodo (C) talks to the head of Indonesia's national search and rescue agency, FHB Soelistyo (L), and Chief of the Sea Security Coordinating Agency, Vice Admiral Desi Albert Mamahit (R) shortly before a news conference about the missing AirAsia Indonesia aircraft flight QZ 8501 in Jakarta, Indonesia, 29 December2014. AirAsia flight QZ 8501, en route from Surabaya to Singapore, was reported missing by Indonesian air authorities on 28 December an hour after take off. Searchers resumed on 29 December, searching land and sea for the AirAsia plane missing in Indonesia with 162 people on board. AirAsia said 155 of the people on board were Indonesians. The others included three from South Korea, and one each from Singapore, Malaysia, France and Britain.
இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ (நடுவில் வெள்ளை சட்டையுடன் இருப்பவர்)

ஏர் ஆசியா தேடுதல் பணிக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள அவசர முகாம் அறைக்கு வருகை தந்த இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோ மீட்புக் குழுவின் தலைவர்களிடம் நிலைமை குறித்து விளக்கம் கேட்டறிந்தார்.

மேலே உள்ள படத்தில் அதிபருக்கு வலது புறத்தில் ஆரஞ்சு வண்ண சட்டையுடன் காட்சியளிப்பவர் இந்தோனேசிய தேசிய மீட்பு மற்றும் தேடுதல் குழுவின் தலைவர் பம்பாங் சொலிஸ்ட்யோ ஆவார்.