Home உலகம் ரஷ்யா அதிபர் புடின் ஒன்றும் புத்திசாலியல்ல – ஒபாமா!

ரஷ்யா அதிபர் புடின் ஒன்றும் புத்திசாலியல்ல – ஒபாமா!

587
0
SHARE
Ad

President Putin continues his working visit to Far Eastern Federal Districtவாஷிங்டன், டிசம்பர் 31 – கிரிமீயா விவகாரத்தில் ரஷ்யா அதிபர் புடின் தவறு செய்துவிட்டதாகவும், புடின் ஒன்றும் புத்திசாலியும் அல்ல என்றும் அமெரிக்கா அதிபர் ஒபாமா கருத்து தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் ஒருபகுதியான கிரிமீயாவை ரஷ்யா தன் நாட்டுடன் இணைத்தது. இதனால் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதித்தன.

இந்த நிலையில் கச்சா எண்ணெய் விலை கடுமையான வீழ்ச்சியடைந்தது. இது ரஷ்யாவின் நாணயமான ரூபிள் மதிப்பை மிகக் கடுமையாக பாதித்தது. டாலருக்கு நிகரான ரூபிள் பாதியாகக் குறைந்துவிட்டது.

#TamilSchoolmychoice

ரூபிளை உயர்த்த அந்நாட்டு மத்திய வங்கி வட்டி வீதத்தை மிக அதிக அளவுக்கு 17% உயர்த்தியது. ஆனால் ரஷ்யாவின் பொருளாதரம் மிக மோசமாக வீழ்ந்து கிடக்கிறது. இந்நிலையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தன.

இந்நிலையில் அமெரிக்கா வானொலிக்கு அளித்த பேட்டியில் ஒபாமா கூறியுள்ளதாவது; “கிரிமீயாவை ரஷ்யாவுடன் இணைத்துக் கொண்டதன் மூலம் அந்த நாட்டு அதிபர் புதின் ராஜதந்திரத் தவறைப் புரிந்துள்ளார்”.

“சில மாதங்களுக்கு முன்பு வாஷிங்டன்னில் இருந்த பலர் கூட, ரஷ்யா அதிபர் தன்னுடைய எதிர்ப்பாளர்களை இலகுவாக சமாளித்துச் செல்கிறார்; மற்றவர்களை மிரட்டி ரஷ்யாவை விரிவாக்குவதில் வெற்றி பெற்றுள்ளார் என்றும் கருதினார்கள்”.

“ஆனால் இப்போது ரஷ்யாவுக்கு வெளியே இருப்பவர்கள் புடின் செய்தது புத்திசாலித்தனமான காரியமில்லை என்று கருதுகிறார்கள். புடின் சிறந்த மேதை என்று பலரும் எண்ணிக் கொண்டிருப்பது தவறு என்றும் அவர் ஒன்றும் புத்திசாலி அல்ல என்பதும் ரஷ்யாவில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது”

“பன்னாட்டுப் பொருளாதாரத் தடைகளும், கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட சரிவும் ரஷ்யாவை நெருக்கடியில் தள்ளியுள்ளது” என ஒபாமா கூறியுள்ளார்.