Home இந்தியா குஜராத் கடல் எல்லையில் தீவிரவாதிகள் – இந்தியா அதிர்ச்சி!

குஜராத் கடல் எல்லையில் தீவிரவாதிகள் – இந்தியா அதிர்ச்சி!

542
0
SHARE
Ad

tblfpnnews_26839411259புதுடெல்லி, ஜனவரி 3 – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மாநிலமான குஜராத்தின் கடல் பகுதி வழியே படகு ஒன்றின் மூலம் தீவிரவாதிகள் ஊடுருவ முயன்ற சம்பவத்தால் இந்திய எல்லைப் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.

புது வருடத்தின் முந்தைய நாளில், இந்திய-பாகிஸ்தான் கடல் எல்லையில் பாகிஸ்தான் படகை இந்திய கப்பற்படையினர் கண்டுள்ளனர். எனினும், அந்த படகில் இருந்த 4 பணியாளர்கள் படகை தாங்களாகவே வெடிக்கச் செய்துள்ளனர்.

இதில் அந்த 4 பேரும் பலியானதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே கராச்சி அருகேயுள்ள கேதி பந்தரில் இத்தகைய படகு ஒன்று சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக உளவுத்துறைக்கு செய்திகள் வந்துள்ளன.

#TamilSchoolmychoice

இந்நிலையில், இந்தியாவில் சதிவேலைகளில் ஈடுபடும் பொருட்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடல் வழியாக ஊடுருவி இருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது.

இது குறித்து கடலோரக் காவற்படையினர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “நாங்கள் அந்தப் படகை செலுத்தி வந்தவர்களிடம் தொடர்ந்து எச்சரிக்கை அளித்து வந்தோம்.

ஆனால் எந்த எச்சரிக்கையையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை. அப்போது படகில் மறைந்திருந்த பணியாளர் ஒருவர் படகுக்கு தீ வைத்தார். இதனால் பெரும் வெடிப்பு ஏற்பட்டு படகு முழுதும் நெருப்புமயமானது” என்று கூறியுள்ளார்.

கடலோரக் காவற்படை எச்சரிக்கை செய்தவுடன்,படகில் இருந்தவர்கள் இந்திய எல்லையை வேகமாக கடந்து செல்ல முயன்றுள்ளனர். சுமார் ஒருமணி நேரம் துரத்தலுக்குப் பிறகு அந்தப் படகை தீ வைத்து வெடிக்கச் செய்துள்ளனர்.

தீக்கிரையான அந்தப் படகில், 4 பேர் மட்டுமே இருந்தனரா அல்லது தீவிரவாதிகளை தப்பிக்கச் செய்வதற்காக அந்தப் படகு வெடிக்கச் செய்யப்பட்டதா என்பது இன்னும் தெரியவில்லை.

இந்தியாவில் வரும் 26-ம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட இருக்கும் நிலையில், பல்வேறு இடங்களில் பயங்கரவாதிகளின் தாக்குதல் நடைபெறலாம் என உளவுத்துறை எச்சரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.