Home தொழில் நுட்பம் ‘ஐகிளவுட்’-ல் சேர நிர்பந்திக்கிறது – ஆப்பிள் மீது வழக்கு!  

‘ஐகிளவுட்’-ல் சேர நிர்பந்திக்கிறது – ஆப்பிள் மீது வழக்கு!  

520
0
SHARE
Ad

icloudகலிபோர்னியா, ஜனவரி 4 – ஆப்பிள் நிறுவனத்தின் புதிய இயங்குதளமான ஐஓஎஸ் 8,  அந்நிறுவனத்தின் தயாரிப்புகளான ஐபோன், ஐ பேட், ஐ பாட்களில் கூடுதல் இடத்தை ஆக்கிரமித்துக் கொள்வதாகவும், அதனை பயன்படுத்திக் கொண்டு ஆப்பிள் நிறுவனம், ‘ஐகிளவுட்’ (iCloud) சேவையில் கட்டணம் செலுத்தி சேரும்படி பயனர்களை நிர்பந்தம் செய்வதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக, அந்நிறுவனத்தின் மீது வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கலிஃபோர்னியா நீதிமன்றத்தில் இது தொடர்பாக தொடரப்பட்டுள்ள வழக்கில் கூறப்பட்டுள்ளதாவது:-

“ஐஒஎஸ் 8 இயங்குதளம், நினைவகத்தில் 23.1 சதவீத இடத்தை ஆக்கிரமிப்பு செய்கிறது. ஐஒஎஸ் 7-லிருந்து, ஐஒஎஸ் 8-க்கு மாறும் பயனர்கள் கூடுதல் சிரமத்தை அனுபவிக்கின்றனர். அவர்களின் கருவிகளில், ஐஒஎஸ் 8, 1.3 ஜிபி அளவிற்கு நினைவக இடத்தை ஆக்கிரமித்துக் கொள்கிறது.”

#TamilSchoolmychoice

“இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் ஆப்பிள், ஐகிளவுட் சேவையில் சேர பயனர்களை நிர்பந்திக்கிறது. ஐகிளவுட் எனும் தகவல் சேமிப்பு சேவைக்கு பயனர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஆப்பிள் பயனடைய நினைக்கிறது” என்று அந்த வழக்கில் கூறப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக ஆப்பிள் நிறுவனம், இதுவரை எந்தவொரு பதிலையும் தெரிவிக்கவில்லை.