கோலாலம்பூர், ஜனவரி 5 – பணி ஓய்விற்குப் பிறகு முதுமையை அமைதியான முறையில் கழிக்க வெளிநாட்டவர்களுக்கான சிறந்த நாடுகளின் பட்டியலை உலகளாவிய ஓய்வுக்கால குறியீட்டு அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் மலேசியா முன்னணியில் இடம்பெற்றுள்ளது.
உலகளாவிய ஓய்வுக்கால குறியீட்டு அமைப்பு ஆண்டு தோறும், உலக அளவில் முதுமையை அமைதியாக செலவிட சிறந்த நாடுகளின் பட்டியலை வெளியிடும். அதன்படி 2014-ம் ஆண்டிற்கான பட்டியலில், மலேசியா முதல் ஐந்து இடங்களுக்குள் இடம் பெற்றுள்ளது.
உலக நாடுகளின், கால நிலை, வாழ்நலம், வாழ்க்கை செலவினங்கள், பாதுகாப்பு ஆகியவற்றினை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஈக்குவேடார், மெக்சிகோ மற்றும் பனாமா ஆகிய நாடுகள் இந்தப் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் உள்ளன. அதனைத் தொடர்ந்து நான்காவது இடத்தில் மலேசியா உள்ளது. எனினும், மற்ற ஆசிய நாடுகளை, மலேசியா பின்னுக்குத் தள்ளி இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.