கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியான இப்படம், இரு வாரங்களில் உலகம் முழுவதும் 544 கோடி ரூபாய் அளவுக்கு வசூலை வாரி குவித்துள்ளது.
இந்தியாவில் மட்டும் இப்படத்தின் வசூல் 370 கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இதன் மூலம் அமீர்கான் நடிப்பில் வெளியான தூம் 3 படத்தில் வசூலை இப்படம் முறியடித்துள்ளது.
அமீர்கான் நடிப்பில் வெளியான தூம் 3 திரைப்படம் உலகம் முழுவதும் 542 கோடி ரூபாய் வசூலாக குவித்திருந்த நிலையில் இப்படம் அச்சாதனையை முறியடித்துள்ளது.
குறிப்பாக அமெரிக்கா மற்றும் கனடாவில் இப்படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளதாம். அங்கும் இப்படம் வசூல் சாதனை புரிந்து வருகிறதாம்.