Home உலகம் பெஷாவர் பள்ளித் தாக்குதலை விட மோசமான தாக்குதல் நடத்தப்படும் – தலிபான்கள்

பெஷாவர் பள்ளித் தாக்குதலை விட மோசமான தாக்குதல் நடத்தப்படும் – தலிபான்கள்

655
0
SHARE
Ad

Tamilஇஸ்லாமாபாத், ஜனவரி 7 – தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் தலைவர் மவுலானா பசுலுலா புதிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் பெஷாவரில் உள்ள ராணுவ பள்ளியில் டிசம்பர் 16-ம் தேதி நடத்தப்பட்ட படுகொலையை விட மோசமான தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளார்.

‘உமர் மீடியா மின்னஞ்சல்’ இணைப்புகள் வழியாக பத்திரிகையாளர்களுக்கு இந்த காணொளி நேற்று வெளியிடப்பட்டது.12 நிமிடங்கள் ஓடும் அந்த காணொளியில் மவுலானா பசுலுலா கூறியுள்ளதாவது,

#TamilSchoolmychoice

“நீங்கள் எங்கள் கைதிகளை சித்திரவதை செய்வதை நிறுத்தாவிட்டால் பெஷாவர் சம்பவத்தை மறக்க செய்யும் படி பல தாக்குதல்கள் நடத்தப்படும்” என்று கூறியுள்ளார்.

“எங்களுக்கும் இராணுவத்திற்கும் இடையே நடைபெறும் இது ஒரு போர் என்றும், இதில் நீங்கள் எங்களை கொல்லவேண்டும் இல்லை நங்கள் உங்களை கொல்லவேண்டும்” என்று அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காணொளி முடிவடையும்போது ஒரு கையெறி குண்டை வெடிக்க செய்து எச்சரித்துள்ளார். தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் தலைவர் மவுலானா பசுலுலாவின் இந்த புதிய காணொளியால் பாகிஸ்தானில் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது. இந்த காணொளி குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.