Home இந்தியா சட்டீஸ்கரில் காவலரை அடித்துக் கொன்ற கரடி! (காணொளி உள்ளே)

சட்டீஸ்கரில் காவலரை அடித்துக் கொன்ற கரடி! (காணொளி உள்ளே)

565
0
SHARE
Ad

hqdefaultசட்டீஸ்கர், ஜனவரி 7 – கிராமத்திற்குள் புகுந்த பெண் கரடி ஒன்று வனக்காவலர் ஒருவரை அடித்துக் கொல்வது போன்ற காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டீஸ்கரின் சுராஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்துக்குள் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு பெண் கரடி ஒன்று புகுந்தது. ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நெருப்பை காட்டி கூச்சலிட்டு கரடியை விரட்டினர்.

இருப்பினும் அவ்வப்போது ஊருக்குள் வந்த கரடி மக்களை தாக்கத் தொடங்கியது. இதில் ஆண் நபர் ஒருவர் பலியானார். எனவே வனத்துறையினருக்கு மக்கள் தகவல் அளித்தனர்.

#TamilSchoolmychoice

Untitledஅங்கு வந்த வனத்துறையினர் கரடியை விரட்டினர். அப்போது எதிர்பாராதவிதமாக காவலர் ஒருவர் கரடியிடம் சிக்கிக் கொண்டனர். அவரையும் கரடி அடித்து கொன்றுவிட்டது.

அவரை யாரும் காப்பாற்றாமல் செல்பேசியில் படமெடுத்து இணையத்தளத்தில் வெளியிட்டனர். தற்போது அந்த காணொளி சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.