Home கலை உலகம் சினிமாவில் நடிக்கிறார் சச்சின் டெண்டுல்கர்!

சினிமாவில் நடிக்கிறார் சச்சின் டெண்டுல்கர்!

620
0
SHARE
Ad

Sachin-Tendulkarபுதுடெல்லி, ஜனவரி 10 – தனது சுயசரிதை கதையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் நடிக்கிறார். ‘200 நாட் அவுட்’ என்ற பெயரிலான மும்பை சினிமா தயாரிப்பு நிறுவனம், சச்சின் டெண்டுல்கர் வாழ்க்கை குறித்த திரைப்படம் ஒன்றை எடுக்க உள்ளது.

இந்த படத்தை பிரபல இயக்குநர் ஜேம் இயக்க இருக்கிறார். இவர் விளையாட்டு பிரபலபங்கள் குறித்த பல்வேறு திரைப்படங்களை எடுத்த வெற்றி கண்டவர். இந்த படத்தில் சச்சின் டெண்டுல்கர் நடிக்க இருக்கிறார்.

இதன் படப்பிடிப்பு தொடங்கி விட்ட நிலையில், படத்தில் நடித்து வருவதோடு, தனது வாழ்க்கை குறித்த தகவல்களையும் இயக்குநரிடம் பகிர்ந்து வருகிறார் சச்சின்.

#TamilSchoolmychoice

இந்த படத்தில் டெண்டுல்கரின் வாழ்க்கையில் ஏற்பட்ட முக்கிய சம்பவங்கள், கிரிக்கெட் வாழ்க்கையில் எதிர்கொண்ட அனுபவங்கள், 16 வயதில் தொடங்கிய கிரிக்கெட் வாழ்க்கை குறித்த பல்வேறு விஷயங்கள் இடம் பெறுகிறது.

ஏற்கனவே, கிரிக்கெட் ரசிகர்களின் கடவுளாக வலம் வரும் சச்சின் டெண்டுல்கர், ஏற்கனவே அரசியலிலும் நுழைந்து நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். தற்போது அவர் சினிமாவிலும் நடிப்பது குறிப்பிடத்தக்கது.