கோலாலம்பூர், ஜனவரி 11 – தலைநகரில் நேற்று சீகா (SICA-South Indian Cinematographers Association) எனப்படும் தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தின் இரண்டாம் நாள் விருதுகள் வழங்கும் விழா நெகாரா உள் அரங்கில் (ஸ்டேடியம் நெகாரா) கோலாகலமாக நடைபெற்றது.
இந்த விழாவிற்கு சிறப்பு வருகையாக நடிகை தமன்னா கலந்து கொண்டார்.
படங்களில் கொடியிடையாளாக வலம் வரும் தமன்னா சீகா விழாவில் சற்று உடல் எடை கூடியது போன்ற தோற்றம் அளித்தார்.பாகுபாலி என்ற புதிய தெலுங்கு படமொன்றில் நடித்து வரும் தமன்னா, விரைவில் தமிழிலும் மீண்டும் கால் பதிக்கவுள்ளார்.சீகா விழாவில் கமலஹாசனுக்கு விருது வழங்கும் போது தமன்னா மற்றும் காஜல் அகர்வால் இருவரும் மேடைக்கு அழைக்கப்பட்டு அழகிய நடன அசைவுகளை செய்து ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தினர்.தமிழ் உச்சரிப்பில் சற்று தடுமாறினாலும், தமன்னா சமாளித்துக் கொண்டு தமிழ் பேச முயற்சி செய்கிறார்.அண்மையில் நடைபெற்ற சைமா விருது விழாவிலும், நேற்று நடைபெற்ற சீகா விருது விழாவிலும் மலேசிய ரசிகர்களிடம் தமன்னா மிகவும் அன்பாகவும், பணிவாகவும் நடந்து கொண்டு அவர்களை உற்சாகப்படுத்தினார்.
படங்கள்: ஃபீனிக்ஸ்தாசன்
#TamilSchoolmychoice
(முக்கிய குறிப்பு: இந்த செல்லியல் செய்தியில் வெளியிடப்பட்டுள்ள படங்கள் யாவும் செல்லியலின் சிறப்பு பிரத்தியேகப் படங்கள் ஆகும். இவற்றை எடுத்தாள்வதற்கும், மறு பிரசுரம் செய்வதற்கும் செல்லியல் நிர்வாகத்தின் முன் அனுமதியைப் பெறவேண்டும்)