பாரிஸ், ஜனவரி 12 – இஸ்லாம் குறித்து கேலிச் சித்திரங்கள் வெளியிட்டதால், சார்லி ஹெப்டே தாக்கப்பட்டதாக கருதப்பட்டு வந்த நிலையில், பிரான்ஸ் தாக்குதல், ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திற்காக நடத்தப்பட்டுள்ளது என தற்போது அம்பலமாகி உள்ளது.
பிரான்ஸ் காவல்துறையினரால் கொல்லப்பட்ட தீவிரவாதி, தாக்குதலுக்கு முன்பு பதிவு செய்த காணொளியில் அதனை தெரிவித்துள்ளான்.
பாரிஸ் நகரில் புகழ்பெற்ற சார்லி ஹெப்டே பத்திரிகை கடந்த வாரம் தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளானது. 12 பேர் கொல்லப்பட்ட இந்த சம்பவத்தினை தொடர்ந்து, பல்வேறு இடங்களை குறி வைத்து தீவிரவாதிகள் தாக்குதலை தொடங்கி உள்ளனர்.
பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டதற்கு காரணமான தீவிரவாதிகளை காவல் துறையினர் சுட்டுக் கொன்றனர். இந் நிலையில் தாக்குதலுக்கு திட்டம் வகுத்த தீவிரவாதியின் காணொளி தற்போது வெளியாகி உள்ளது.
அதில், “நீங்கள் எங்களுக்கு கொடுத்ததை திருப்பிக் கொடுத்துள்ளோம். நீங்கள் இஸ்லாமிய தேச போராளிகளை தாக்கினீர்கள். அதற்கான பதிலடியை நாங்கள் தற்போது கொடுத்துள்ளோம்” என்று கூறியுள்ளான்.
இதில் தீவிரவாதி குறிப்பிடும்’ இஸ்லாமிய தேசம்’ (Islamic Sate) என்பது, ஐஎஸ்ஐஎஸ் சிரியா, ஈராக் உட்பட சில நாடுகளை ஒருங்கிணைத்து அறிவித்த தனி நாடாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், பிரான்ஸ் தாக்குதலுக்கு, அல்கொய்தா இயக்கம் பொறுப்பேற்ற நிலையில், தீவிரவாதியின் காணொளியால் பெரும் குழப்பமும், ஐஎஸ்ஐஎஸ் ஊடுருவல் குறித்த அச்சமும் ஏற்பட்டுள்ளது.
தீவிரவாதியின் காணொளியைக் கீழே காண்க:
https://www.youtube.com/watch?v=08zZ8-GIUCk