Home உலகம் அணு ஆயுதத் தடை ஒப்பந்தம் – இந்தியாவிடம் பான் கீ மூன் வலியுறுத்தல்!

அணு ஆயுதத் தடை ஒப்பந்தம் – இந்தியாவிடம் பான் கீ மூன் வலியுறுத்தல்!

637
0
SHARE
Ad

ban ki moon 544dபுதுடெல்லி, ஜனவரி 13 – இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஐநா.பொது செயலாளர் பான் கீ மூன், அணு ஆயுத பாதுகாப்பு குறித்தும், அணு ஆயுத தாக்குதல் குறித்தும் முக்கிய கருத்துக்களை வலியுறுத்தி உள்ளார்.

இந்தியத் தலைநகரான டெல்லியில் அனைத்துலக உறவுகள் தொடர்பான இந்திய குழுவினரின் கூட்டத்தில் கலந்து கொண்டு பான் கி மூன் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:- “உலகின் மிகப்பெரிய சவாலாக தீவிரவாதம் வளர்ந்து நிற்கிறது. சமீபத்தில் பெஷாவரில் பள்ளி குழந்தைகள் மீதான தாக்குதல், பாரீசில் நடந்த தாக்குதல் நமது சுதந்திரத்தினை கேள்விக் குறியாக்கி உள்ளது”.

#TamilSchoolmychoice

“இதன் மூலம் தெற்காசிய வட்டார நாடுகளில் தீவிரவாத வன்முறைகள் அதிகரித்திருப்பது ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற வகையில் இந்த பிரச்சினையில் இந்தியா முக்கிய பங்காற்ற வேண்டும்”.

“இந்தியாவின் வட்டார சூழல் பாதுகாப்பானதாக இருந்தால், இந்தியா தனது இலக்கினை விரைவில் அடையும். அரசியல் தலைவர்கள் நீண்டகாலமாக உள்ள பழைய பிரச்சனைகளை தீர்க்க வேண்டும்”.

“குறிப்பாக இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையே உள்ள பிரச்சனைகள், பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே உள்ள நிலையற்ற தன்மை போன்றவற்றை அந்தந்த நாடுகளுக்கு மட்டும் பொறுப்பானதல்ல.”

“தெற்கு ஆசிய பகுதியில் அணு ஆயுத தாக்குதல்கள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் அணு ஆயுதங்கள் உற்பத்தி அதிகரிப்பதை தடுப்பதற்கான பொறுப்பை இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டும்”.

“அனைத்து அணு ஆயுத சோதனைகளையும் தடை செய்வதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட வேண்டும். அமைதியை பாதுகாப்பதில் ஐ.நா.விற்கு இந்தியாவின் பங்களிப்பு பெரிதும் தேவை” என்று அவர் கூறியுள்ளார் பான் கி மூன்.