Home கலை உலகம் கமலின் ‘உத்தம வில்லன்’ முன்னோட்டம் வெளியீடு!

கமலின் ‘உத்தம வில்லன்’ முன்னோட்டம் வெளியீடு!

631
0
SHARE
Ad

Uttama villanசென்னை, ஜனவரி 13 – உலக நாயகன் கமலஹாசன் மற்றும் மறைந்த இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தரின் கடைசி படமான ‘உத்தம வில்லன்’ படத்தில் முன்னோட்டம் தற்போது வெளியாகியுள்ளது.

இப்படத்தில் உத்தமன் என்ற சரித்திரகால நாடக நடிகராகவும், நிகழ்கால சினிமா சூப்பர் ஸ்டாராகவும் கமல் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். நாடக நடிகர், சினிமா நடிகர் என்பதால் படத்தில் விதவிதமான தோற்றங்களில் கமல் தோன்றுகிறார்.

ரமேஷ் அரவிந்த் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் பூஜா குமார், ஆண்ட்ரியா, ஊர்வசி, பார்வதி நாயர், பார்வதி மேனன், மறைந்த இயக்குநர் சிகரம் பாலசந்தர், கே.விஸ்வநாத், ஜெயராம் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். படம் அடுத்தமாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி பெறும் வரவேற்பை பெற்று வருகிறது.

‘உத்தம வில்லன்’ முன்னோட்டம்: