Home கலை உலகம் இன்று ஐ, ஆம்பள, டார்லிங் படங்கள் வெளியீடு!

இன்று ஐ, ஆம்பள, டார்லிங் படங்கள் வெளியீடு!

624
0
SHARE
Ad

???????????????????????????????????????????????????????????????????சென்னை, ஜனவரி 14 – பொங்கல் என்றாலே இனிப்பான பொங்கல், மஞ்சள், கடிக்க கரும்பு, பின் புதுப்படங்கள். இந்த முறை எதிர்பார்ப்புகள் சற்று அதிகமாகவே இருந்தது.

அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ மற்றும் ‘ஐ’ இவ்விரு படங்களும் போட்டி போட்டுக்கொண்டு இறங்குமென நினைத்தோம். திடீரென ‘என்னை அறிந்தால்’ இறுதிக்கட்ட பணிகள் முடியவில்லை என ஒதுங்கி கொண்டது.

இப்போது ‘ஐ’, ‘ஆம்பள’ மற்றும் எதிர்பாராத வரவாக ‘டார்லிங்’ இணைந்துள்ளது. இதில் இந்திய ரசிகர்கள் பலரும் எதிர்பார்க்கும் படம் ‘ஐ’. விக்ரம், எமி ஜாக்சன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியாக உள்ளது.

#TamilSchoolmychoice

aiபொங்கல் சிறப்பாக திரைக்கு வரவிருப்பதாக இருந்து இடைக்கால தடை என சில காரணங்களால் படம் வெளியாவதில் சற்றே சந்தேகம் தலைதூக்கியது.

ஒரு வழியாக இப்போது பிரமாண்டமாக வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். இந்த படத்திற்காக விக்ரம் தனது முழு உழைப்பையும் கொடுத்துள்ளார்.

தீபாவளி அன்றே திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டு இறுதிக்கட்ட வேலைகள் முடிவடையாத காரணத்தால் படம் தள்ளிப்போடப்பட்டது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் ’ஐ’, சுமார் 3000-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Ampala-Vishalபொங்கல் ரேசில் அடுத்து ‘ஆம்பள’. சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், ஹன்சிகா, ரம்யா கிருஷ்ணன், வைபவ், சந்தானம், சதீஷ், கிரண், ஐஸ்வர்யா என ஒரு நடிகர்கள் பட்டாளமே கலக்கியுள்ளனர்.

சுருக்கமாக சொன்னால் பொங்கலுக்கு ஏத்த படம் என்றும் சொல்லலாம். ஏனென்றால் சுந்தர்.சி என்றாலே காமெடிக்கும், கலகலப்புக்கும் பஞ்சம் இருக்காது.

‘டார்லிங்’, தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ‘பிரேம கதா சித்ரம்’ படத்தின் தமிழ் பதிப்பு. பொங்கல் ரேசில் திடீரென குதித்த படம். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது.

darlingஅப்போது ஜி.வி.பிரகாஷ் பேசும்போது ”என் தாடியை பார்த்துதான் இப்பட வாய்ப்பு வந்தது என கூறியுள்ளார். நிக்கி கல்ராணி, ஸ்ருஷ்டி நடிக்கும் இப்படத்தில் நிக்கி பேயாக மிரட்ட இருக்கிறார்.

‘டார்லிங்’ முன்னோட்டம் பார்த்து வாழ்த்தியுள்ளார் ஏ.ஆர்.ரகுமான். சாம் ஆண்டன் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக அறிமுகமாக உள்ள படம் வசூலிலும் மை ‘டார்லிங்’ என சொல்ல வைக்குமா என பொருத்திருந்து பார்ப்போம்.

இந்த பொங்கலுக்கு 6 படங்கள் வெளியாகும் ஆகும் என எதிர்பார்த்து, மூன்று படங்களாக குறைந்துள்ளது. இந்த மூன்றில் பொங்கல் விருந்து படைக்கப் போவது எந்த படம் என்பது இரு தினங்களில் தெரிந்துவிடும்.