Home நாடு பொதுப் பல்கலைக்கழகத்தில் உரையாற்ற மரீனா மகாதீருக்கு தடை!

பொதுப் பல்கலைக்கழகத்தில் உரையாற்ற மரீனா மகாதீருக்கு தடை!

584
0
SHARE
Ad

marina-mahathirகோலாலம்பூர், ஜனவரி 14 – பொது பல்கலைக்கழகத்தில் உரையாற்ற மனித உரிமை போராளியான மரீனா மகாதீருக்கு தடை விதிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த வகையில் அவருக்கு ஐந்தாவது முறையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தனது ஃபேஸ்புக் வலைதளப் பக்கத்தில் மிக விரக்தியுடன் கூடிய தொனியில் பதிவிட்டுள்ளார் மரீனா.

“இது தொடர்பாக அதிகம் வாக்குவாதம் புரிய முடியவில்லை. ஏனெனில் எல்லா பொதுப் பல்கலைக் கழகங்களும் சில விதிமுறைகளைப் பின்பற்றுவதாகக் கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

“எந்தப் பல்கலைக்கழகம் என்னை உரையாற்ற அழைத்தது என்பதைக் குறிப்பிட விரும்பவில்லை. ஏனெனில், என்னால் மாணவர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படக்கூடாது,” என்று மரீனா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தனது தந்தையின் ஆட்சிக் காலத்தில் இவ்வாறான தடைகள் ஏதும் விதிக்கப்பட்டதில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், தற்போது மட்டும் ஏன் இத்தகைய தடைகள் விதிக்கப்படுகின்றன எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் தன்னை உரையாற்ற அழைத்த மாணவர்கள் இஸ்லாமியர்கள் அல்ல என்றும் துன் மகாதீரின் மூத்த மகளான அவர் தெரிவித்துள்ளார்.

“எனது உரையை ரத்து செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆட்பட்ட பொது பல்கலைக்கழக மாணவர்கள் புதன்கிழமை தனியார் கல்லூரியில் நான் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு வரவேற்கப்படுகிறார்கள். அவர்கள் எந்த நேரத்திலும் என்னைத் தொடர்பு கொண்டு பேசலாம்,” என்று மரீனா மகாதீர் மேலும் கூறியுள்ளார்.