Home இந்தியா குஷ்பு நடிக்க வாய்ப்பு இல்லாததால் காங்கிரஸில் இணைந்துவிட்டார் – கங்கை அமரன்!

குஷ்பு நடிக்க வாய்ப்பு இல்லாததால் காங்கிரஸில் இணைந்துவிட்டார் – கங்கை அமரன்!

606
0
SHARE
Ad

kusbooசென்னை, ஜனவரி 17 – குஷ்புவுக்கு வயதாகி விட்டதால் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார் என்று சமீபத்தில் பாஜகவில் இணைந்த இசையமைப்பாளர் கங்கை அமரன் கூறியுள்ளார்.

அரசியலில் ஈடுபடம் வேண்டும் என்று நினைத்த நீங்கள், பாஜகவில் இணைந்ததன் காரணம் என்ன என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்துள்ள கங்கை அமரன், “காங்கிரஸ் வயதான கட்சி, அங்கே யார் இருக்கா? காங்கிரஸில் நல்ல மனிதர் என்றால் காமராஜரும், கக்கனும் தான். அதன் பிறகு அந்தக் கட்சியில் இருந்து நல்ல தலைவர்களே உருவாகவில்லை”.

#TamilSchoolmychoice

“காங்கிரஸின் கொள்கை, இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்க வேண்டும் என்பதாக இருந்தது. அதை வாங்கியபோதே கட்சியைக் கலைச்சிருக்கணும்”.

“ஆனால் அதற்கு பின்னர், பணக்காரர்கள் பணக்காரர்களாகவே இருக்க வேண்டும், ஏழைகள் ஏழையாகவே இருக்க வேண்டும் என்கிற கொள்கைதான் வைத்திருக்கிறார்கள்”.

“மோடியின் திட்டங்கள் அனைத்தும் இளைஞர்களை ஈர்க்கும் விதமாக இருப்பதால், பாஜகவில் சேர்ந்து விட்டேன் என்று கூறியுள்ளார். மேலும் குஷ்பு காங்கிரஸில் இணைந்துள்ளாரே என்ற கேள்விக்கு,

“குஷ்புவுக்கு வயசாகிப்போச்சு. நடிப்பு வாய்ப்பும் இல்லை. ஏதாவது வேலை வேணுமில்லையா? அதனால் தான் காங்கிரஸில் சேர்ந்திருக்கும்”.

“ஒரு கட்சியில் சேரும் முன்னே யோசிக்கணும். சேர்ந்த பின்பு கொள்கை பிடிக்கலைன்னு வேற கட்சிக்குப் போறது தவறு. குஷ்பு ஏன் காங்கிரஸில் இணைந்தார் என்று அவரை, நானே நேரில் பார்க்கும் போது கேட்டு சொல்கிறேன் என பேசியுள்ளார் கங்கை அமரன்.