Home இந்தியா சுனந்தா கொலை வழக்கு: சசிதரூரிடம் போலீசார் தீவிர விசாரணை!

சுனந்தா கொலை வழக்கு: சசிதரூரிடம் போலீசார் தீவிர விசாரணை!

650
0
SHARE
Ad

sashiபுதுடெல்லி, ஜனவரி 20 – சுனந்தா கொலை வழக்கு தொடர்பாக அவரது கணவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசிதரூரிடம் நேற்று வசந்த் விகார் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

கடந்த ஐமு கூட்டணி ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் சசிதரூர். இவரது மனைவி சுனந்தா புஷ்கர் (51). கடந்த 2010-ஆம் ஆண்டு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதி, தெற்கு டெல்லியில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் சுனந்தா மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

#TamilSchoolmychoice

சசிதரூருக்கும், பாகிஸ்தானை சேர்ந்த பெண் நிருபர் மெஹருக்கும் பழக்கம் இருந்ததாகவும், அதனால் சசிதரூர், சுனந்தா தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

இதற்கிடையே சமீபத்தில் சுனந்தாவின் உடல் உறுப்புகளை ஆய்வு செய்தபோது அவர் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரியவந்தது. அதன் அடிப்படையில் சுனந்தா மரணத்தை டெல்லி போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், சுனந்தா கொலை வழக்கு தொடர்பாக அவரது கணவர் சசிதரூரிடம் விசாரணை நடத்தப்படலாம் என போலீஸ் கமிஷனர் பாஷி தெரிவித்திருந்தார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில்,

‘‘சுனந்தா கொலை வழக்கு குறித்து இதுவரை சசிதரூரிடம் விசாரணை நடத்தப்படவில்லை. விரைவில் அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளோம். இந்த வழக்கு குறித்து யார் எந்த தகவல் அளித்தாலும், அதை ஏற்றுக்கொள்வோம்”.

“இவ்வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் விரைந்து விசாரிக்க முடிவு செய்துள்ளோம். தேவைப்பட்டால், மேலும் சிலரிடம் விசாரிப்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்‘‘ என்றார்.

இந்நிலையில் தெற்கு டெல்லியில் உள்ள வசந்த் விகார் காவல் நிலையத்துக்கு நேற்று சசிதரூர் வந்தார். அவரிடம் சுனந்தா கொலை வழக்கு தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

சசிதரூருக்கு நெருங்கிய பழக்கம் உள்ளதாக கூறப்படும், பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த நிருபர் மெஹர் தரூரிடமும் போலீசார் விசாரணை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.