Home 13வது பொதுத் தேர்தல் வான் அசிசா தேர்தலில் போட்டியிடமாட்டார் – அடுத்த சிலாங்கூர் மந்திரிபுசார் அஸ்மின் அலியா?.

வான் அசிசா தேர்தலில் போட்டியிடமாட்டார் – அடுத்த சிலாங்கூர் மந்திரிபுசார் அஸ்மின் அலியா?.

768
0
SHARE
Ad

கோலாலம்பூர்,  பிப் 28-  பிகேஆர் கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ வான் அஸிசா எதிர்வரும் 13வது பொதுத் தேர்தலில் நிச்சயம் போட்டியிடமாட்டார் என அக்கட்சியின் துணைத்தலைவர் அஸ்மின் அலி உறுதிப்படுத்தி உள்ளார். இது வான் அஸிசாவே எடுத்த முடிவாகும் என்றும் அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து வான் அசிசா சிலாங்கூர் சட்டமன்றத்திற்குப் போட்டியிடுவார் என்றும், அடுத்த சிலாங்கூர் மந்திரிபுசாராக அவர்தான் நியமிக்கப்படுவார் உலவி வந்த ஊகங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Wan Azizah 1எனவே, நடப்பு சிலாங்கூர் மந்திரிபுசார் டான்ஸ்ரீ காலிட் இப்ராகிம் நாடாளுமன்ற தொகுதிக்கு போட்டியிட்டு வென்றால், மக்கள் கூட்டணியும் ஆட்சியைப் பிடித்தால், அவர் மத்திய அமைச்சராக தேர்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

#TamilSchoolmychoice

அத்தகைய நிலைமையில் சிலாங்கூர் மாநிலத்தை பிகேஆர் மீண்டும் கைப்பற்றுமானால், அஸ்மின் அலி சிலாங்கூர் மந்திரி புசாராக பதவியேற்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

வான் அஸிசா போட்டியிடுவதை கட்சி விரும்புகிறது

கட்சி உறுப்பினர்களும் உயர்மட்டத் தலைவர்களும் வான் அஸிசா போட்டியிடவேண்டும் என்று விரும்புவதாகவும், வான் அஸிசாவுக்கு அதில் விருப்பமில்லாததால் அவரை கட்டாயப்படுத்த முடியாது என்றும்,அவரது முடிவை நாங்கள் ஏற்றுக்கொண்டேயாக வேண்டும் என்றும் அஸ்மின் அலி கூறியுள்ளார்.

அதோடு கட்சித் தலைவர் என்ற முறையில் அவரது அனைத்து முடிவுகளையும் பிகேஆர் தலைமைத்துவம் ஏற்றுக்கொள்ளும் என்றும் துணைத்தலைவர் அஸ்மின் அலி தெரிவித்தார்.

முன்னாள் பெர்மாத்தாங் பாவ் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான வான் அஸிசா தனது கணவர் அன்வார் இப்ராஹிம் விடுதலையானபின் ,அவருக்கு வழிவிடும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து, இடைத் தேர்தலுக்கு வழிவிட்டார் என்பது அனைவரும் அறிந்ததே.

கட்சிப்பணிகளில் முழு கவனம்-வான் அஸிசா அறிவிப்பு

இதற்கிடையில் கட்சித்தலைவர் என்ற முறையில் அப்பதவிக்குரிய அனைத்துப் பணிகளிலும் தாம் முழு கவனம் செலுத்தப்போவதாக வான் அஸிசா தெரிவித்துள்ளார்.

அவற்றுள் அஸ்மின் அலி கூற்றுப்படி கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வேட்பாளர்களை அடையாளம் கண்டு நீக்குவதும், சிறந்த வேட்பாளர்களைஅறிமுகப்படுத்துவதும் அடங்கும்.