Home உலகம் பொன்சேகாவிற்கு பொதுமன்னிப்பு – ராஜபக்சேவிற்கு கூடுதல் நெருக்கடி!

பொன்சேகாவிற்கு பொதுமன்னிப்பு – ராஜபக்சேவிற்கு கூடுதல் நெருக்கடி!

560
0
SHARE
Ad

rajaகொழும்பு, ஜனவரி 22 – ராஜபக்சே அரசால் சிறை வைக்கப்பட்டிருந்த, இலங்கை முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு பொதுமன்னிப்பு வழங்க புதிய அதிபர் மைத்ரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட விவகாரத்தில் ஐ.நா. விசாரணைக்கு, இலங்கை அரசு ஒத்துழைக்க சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் தளபதியாக செயல்பட்ட பொன்சேகாவிற்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது, ராஜபக்சேவிற்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

2009-ம் ஆண்டு இலங்கை இறுதி யுத்தத்தின் போது இராணுவ தளபதியாக இருந்தவர் சரத் பொன்சேகா. பின்னர் 2010-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.

#TamilSchoolmychoice

இலங்கையில் ஐந்து நட்சத்திர ஜெனரல் தகுதி கொண்ட இராணுவத் தளபதியாக இருந்த பொன்சேகா, நாடாளுமன்ற தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

எனினும், நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததுமே ஊழல், மோசடி குற்றச்சாட்டின் பேரில் பொன்சேகா குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டார்.

இதனால் அவரின் இராணுவப் பட்டங்கள், விருதுகள் அனைத்தும் பறிக்கப்பட்டன. இராணுவப் பதிவேடுகளிலிருந்தும் பொன்சேகாவின் பெயர் நீக்கப்பட்டது.

இந்நிலையில், சரத் பொன்சேகாவை ஆதரித்து வந்த மைத்ரிபால சிறிசேனா, அவருக்கு பொது மன்னிப்பு வழங்க உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து சரத் பொன்சேகாவிடம் இருந்து  பறிக்கப்பட்ட விருதுகள், பதக்கங்கள் அனைத்தும் திருப்பி ஒப்படைக்கப்பட இருக்கின்றது.

ஐ.நா. விசாரணையில் 2009-ம் ஆண்டு உள்நாட்டு யுத்தத்தின் போது நடந்தவைகள் மற்றும் அதிபரால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் பற்றி பொன்சேகா வாய்திறந்தால், ராஜபக்சேவின் போர் குற்றங்கள் நிரூபணமாகும் என்று இலங்கை வட்டாரங்களால் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.