Home நாடு 9வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு கண்காட்சி தொடங்கியது

9வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு கண்காட்சி தொடங்கியது

634
0
SHARE
Ad

IMG_6998கோலாலம்பூர், ஜனவரி 23 – அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் முதல் கட்ட தொடக்கமாக, மலேசியத் தமிழர்களின் வரலாற்றையும், பாரம்பரியத்தையும் எடுத்துக் கூறும் கண்காட்சி இன்று மலாயாப் பல்கலைக் கழகத்திலுள்ள ஆசிய தொல்பொருள் கண்காட்சி மையத்தில் தொடக்கி வைக்கப்பட்டது.

IMG_6953‘மலேசியத் தமிழர் வாழ்வும், வரலாறும்’ என்ற தலைப்பில் இந்த கண்காட்சி நடத்தப்படுகின்றது.

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் தலைவரும், தெற்கிழக்காசிய நாடுகளுக்கான கட்டமைப்பிற்கான மலேசியத் தூதருமான டத்தோஸ்ரீ உத்தாமா ச.சாமிவேலு இந்த மாநாட்டைத் தொடக்கி வைத்து உரையாற்றினார்.

#TamilSchoolmychoice

இந்த நிகழ்வில் மலாயாப் பல்கலைக் கழக உயர் அதிகாரிகளும், விரிவுரையாளர்களும், கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் செயலாளரான டத்தோ டி.மாரிமுத்துவும் இந்த கண்காட்சி திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

திறப்பு விழாவிற்குப் பின்னர், கெடாவின் பூஜாங் பள்ளத்தாக்கு குறித்த நூலை ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதி வெளியிட்ட டத்தோ வி.நடராஜன், பூஜாங் பள்ளத்தாக்கு குறித்தும், தமிழர்களின் சரித்திர கால வெற்றிகள் குறித்தும் உரையாற்றினார்.IMG_6946

மலேசியத் தமிழர் வாழ்வும் வரலாறும் – என்ற  தலைப்பிலான கண்காட்சி தொடக்க விழாவில் பிரதான மேடையில் சாமிவேலுவுடன் பிரமுகர்கள்.