Home நாடு மன்னர் அப்துல்லா இறுதிச்சடங்கில் பங்கேற்க விரைந்தார் நஜிப்

மன்னர் அப்துல்லா இறுதிச்சடங்கில் பங்கேற்க விரைந்தார் நஜிப்

617
0
SHARE
Ad

டாவோஸ், ஜனவரி 23 – சுவிட்சர்லாந்து நாட்டின், டாவோசில் நடைபெறவுள்ள உலக பொருளாதார கருத்தரங்கம் தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளையும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரத்து செய்துள்ளார்.

அந்த நிகழ்வுகளை ரத்து செய்து விட்டு, அவர் சவுதி அரேபியா மன்னர் அப்துல்லாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Abdullah Saudi King

#TamilSchoolmychoice

சவுதி மன்னர் கடந்த 2006ஆம் ஆண்டு ஜனவரியில் மலேசியாவுக்கு வருகை தந்தபோது.. 

பிரதமர் நஜிப்பும் அவரது துணைவியார் ரோஸ்மாவும் மலேசிய நேரப்படி வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு டாவோசில் இருந்து ரியாத் நகருக்குப் புறப்படுவார்கள் என்று பிரதமரின் ஊடகத் தொடர்பாளர் டத்தோ அக்மர் ஹிஷாம் தெரிவித்தார்.

அதேசமயம் இம்மாதம் 24ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை பிரதமர் நஜிப் இங்கிலாந்துக்கு மேற்கொள்ள இருக்கும் அதிகாரப்பூர்வ பயணம் திட்டமிட்டபடி நிகழும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபிய மன்னர் அப்துல்லா வெள்ளிக்கிழமை அதிகாலை தமது 90ஆவது வயதில் காலமானார்.