ஆனால் டெல்லியில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் கலந்து கொள்ளும் சிறப்பு விருந்தினர், இந்திய அதிபருடன் இணைந்தே வர வேண்டும் என்ற நடைமுறை இந்தியாவில் பின்பற்றப்படுகிறது.
இந்த நடைமுறையை ஒபாமா கடைப்பிடித்தால், இந்தியாவில் பீஸ்ட் காரை பயன்படுத்தாத முதல் அமெரிக்க ஜனாதிபதி என்ற பெருமையை அவர் பெறுவார்.
இதற்கிடையே ஒபாமாவின் ‘பீஸ்ட்’ காரில் அடங்கியுள்ள மலைக்க வைக்கும் வசதிகள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. ‘நகரும் கோட்டை’ என வர்ணிக்கப்படும் இந்த கார், 8 டன் எடை கொண்டது.
இந்த கார் 8 அங்குல தடிமன் கொண்ட உடல் கவசத்தையும், 5 அங்குல தடிமன் கொண்ட குண்டு துளைக்காத கண்ணாடி ஜன்னல்களையும் கொண்டது. இவை, உள்ளே இருக்கும் ஜனாதிபதியை ரசாயன தாக்குதல் உள்ளிட்ட அனைத்து விதமான தாக்குதல்களில் இருந்தும் காக்க வல்லது.
காரின் கதவுகள் அனைத்தும், போயிங்- 757 ரக விமானங்களின் கதவுகளை ஒத்திருக்கும். இந்த காரில் உருக்கினால் செய்யப்பட்ட விளிம்புகளுடன் கூடிய, ‘பஞ்சர்’ ஆகாத சக்கரங்கள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த விளிம்புகள் பொருத்தப்பட்டிருப்பதால், கார் பஞ்சர் ஆனாலும், நிற்காமல் சென்று விட முடியும்.