புதுடெல்லி, ஜனவரி 26 – இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு அதிபர் பிரணாப் முகர்ஜி இரவு விருந்தளித்தார். இந்த விருந்தில் துணை அதிபர் ஹமீத் அன்சாரி,பிரதமர் மோடி,
மத்திய அமைச்சர்கள் சுஷ்மா சுவராஜ், ரவிசங்கர் பிரசாத், உ.பி, முதல்வர் அகிலேஷ் யாதவ், தொழிலதிபர் முகேஷ் அம்பானி, நோபல் பரிசு பெற்ற சத்யார்த்தி, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த விருந்து நிகழ்ச்சிக்கு சுமார் 2 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விருந்து நிகழ்ச்சியில் பேசிய அதிபர் பிரணாப் முகர்ஜி, இன்று நாம் வரலாற்று சாதனை நிகழ்த்தியதற்காக பெருமைப்படுவதாகவும், இந்தியா அமெரிக்கா உறவு சிறப்பான ஒன்று என கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அதிபர் ஒபாமா, “பிரதமர் மோடி மிகவும் உறுதியானவர். முதலை தாக்குதலில் இருந்து தப்பித்தவர். இன்று நான் மோடி முகமூடி அணிந்ததை போல் உணர்கிறேன் என கூறினார்.