Home வணிகம்/தொழில் நுட்பம் ஒரே மாதத்தில் இந்தியாவில் அந்நிய முதலீடு 21000 கோடியாக உயர்வு!

ஒரே மாதத்தில் இந்தியாவில் அந்நிய முதலீடு 21000 கோடியாக உயர்வு!

667
0
SHARE
Ad

world-with-moneyடெல்லி, ஜனவரி 27 – ஜனவரி மாதத்தில் மட்டும் இந்தியாவில் அந்நிய முதலீட்டாளர்கள் சுமார் 21000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர்.

எதிர்வரும் காலங்களில் ஆசிய அளவில் பொருளாதாரத்தில் நீடித்த வளர்ச்சியைப் பெறும் நாடாக இந்தியா, பொருளாதார நிபுணர்களால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நிய முதலீட்டாளர்களின் இந்த முதலீடு இந்தியப் பொருளாதாரத்திற்கு வலு சேர்த்துள்ளது.

உலகின் பெரும்பாலான நாடுகள் கச்சா எண்ணெய் விலை சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சீனாவிற்கு கச்சா எண்ணெய் விலை சரிவு இலாபகரமானதாக இருந்தாலும், நடப்பாண்டில் பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவை விட சற்று பின்னோக்கியே உள்ளது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்களை பயன்படுத்திக் கொண்ட இந்தியா, பணவீக்க அளவை குறைக்க பல்வேறு நடவடிகைகள் முன்னெச்சரிக்கையாக மேற்கொண்டது. மேலும், ரிசர்வ் வங்கியும் தனது வட்டி விகிதங்களை குறைப்பதாக அறிவித்தது.

இதன் காரணமாக இந்திய சந்தையில் ஜனவரி மாதத்தில் சுமார் 21,000 கோடி ரூபாயை அந்நிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளனர்.

ஜனவரி 23-ம் தேதி வரையில் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடன் சந்தையில் 15,336 கோடி ரூபாயும், பங்குகளில் 5,992 கோடி ரூபாயும் முதலீடு செய்யுள்ளனர்.

ஆசிய சந்தைகளை பொருத்தவரை சீனாவும், இந்தியாவும் தான் பெரும்பாலும் கோலோச்சுகின்றன. இந்நிலையில் சீனாவை விட இந்தியாவில் சிறப்பான பொருளாதாரம் நிலவுவதால், அந்நிய முதலீட்டாளர்கள் அதிகளவிலான முதலீடுகளை இந்திய சந்தைகளில் செய்து வருகின்றனர்.

அதேபோல் இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள 0.25 சதவீத வட்டிக் குறைப்பு சந்தையின் முதலீட்டு அளவை உயர்த்தி உள்ளது.மேலும், ஐரோப்பாவின் மத்திய வங்கி வெளியிட்ட 100 பில்லியன் யூரோ முதலீட்டுத் திட்டம், இந்தியா மற்றும் பிற வளரும் நாடுகளுக்கு புதிய ஊக்கத்தை அளித்துள்ளது.

தற்போதய நிலை நீடித்தால், கடந்த ஆண்டைக் காட்டிலும், நடப்பு ஆண்டில் இந்தியாவில், ஒட்டுமொத்த அந்நிய முதலீடுகளும் எதிர்பார்க்காத வளர்ச்சியைப் பெரும் என்று நம்பப்படுகிறது.

2014-ம் நிதியாண்டில் இந்தியாவில் கடன் சந்தையில் 1.16 லட்சம் கோடி ரூபாயும், பங்குச் சந்தையில் 98,150 கோடி ரூபாயும் அந்நிய முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.