Home கலை உலகம் மிஸ் யுனிவர்ஸ் – பாரம்பரிய உடை அணிவகுப்பு – தொகுப்பு 2 (படக் காட்சிகளுடன்)

மிஸ் யுனிவர்ஸ் – பாரம்பரிய உடை அணிவகுப்பு – தொகுப்பு 2 (படக் காட்சிகளுடன்)

1084
0
SHARE
Ad

மியாமி, ஜனவரி 27 – நேற்று நடைபெற்று முடிந்த மிஸ் யுனிவர்ஸ் உலக அழகிப் போட்டியில் கொலம்பிய அழகி பவுலினா வேகா வெற்றியாளராக வாகை சூடியுள்ளார்.

இந்தப் போட்டியில் கலந்து கொண்ட அழகிகள் தங்களின் நாட்டு பாரம்பரிய உடைகளில் பவனி வந்து நீதிபதிகளை அசத்தினர்.

விதம் விதமான வண்ணங்கள், வித்தியாசமான வடிவங்கள், விழிகளை விரிய வைத்த கவர்ச்சி என மிஸ் யுனிவர்ஸ் அழகிகளின் படக் காட்சிகள் சில இங்கே:-

#TamilSchoolmychoice

?????????????????

மஞ்சள் நிறப் பூக்களின் கிளைகளைப் போன்ற வடிவத்துடன் உடுத்தி வந்த வெனிசூலா நாட்டு அழகி  மிக்பெலிஸ் காஸ்ட்டெல்லானோஸ் (Migbelis Castellanos)

?????????????????

வெண்ணிற இறக்கை கட்டி – கிரீடத்துடன் வந்த தேவதை போல தோற்றத்துடன் வலம் வந்த அர்ஜெண்டினா அழகி, வாலெண்டினா ஃபெர்ரர் (Valentina Ferrer)

?????????????????

ஸ்பெயின் நாட்டு பாரம்பரிய உடை இதுவென வித்தியாசம் காட்டும் அந்நாட்டு அழகி டிசையர் கொர்டிரோ ஃபெர்ரர் (Desire Cordero Ferrer)

?????????????????

வித்தியாசமான கிரீடம் – அலங்காரங்களுடன் கயானா நாட்டு அழகி நிக்கிதா பார்க்கர் (Niketa Barker)

?????????????????

ஆதிவாசிப் பெண்ணோ, தெருவோரம் கிலுகிலுப்பை விற்கும் பெண்ணோ அல்ல இவர் – மிஸ் யுனிவர்ஸ் போட்டிக் களத்தில் மற்றொரு வித்தியாச அணிகலனில் பவனி வந்த இக்குவேடோர் நாட்டு அழகி அலெஜாண்ட்ரா ஆர்குடோ (Alejandra Argudo)

?????????????????

இலங்கை நாட்டை பிரதிநிதித்து அழகிப் போட்டியில் கலந்து கொண்ட மரியான் பேஜ் (Marianne Page) நீலமும் பச்சையும் கலந்த வித்தியாச ஆடை வடிவமைப்போடு பவனி வந்தபோது…

படங்கள்:EPA