Home நாடு மஇகா தலைமையகத்தில் வாக்குவாதம் – உள்ளே செல்ல அனுமதி மறுப்பு!

மஇகா தலைமையகத்தில் வாக்குவாதம் – உள்ளே செல்ல அனுமதி மறுப்பு!

624
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜனவரி 28 – மஇகா தலைவர் பழனிவேல் நேற்று மாநிலத் தலைவர் பதவிகளில் செய்த அதிரடி மாற்றங்களால், தற்போது அக்கட்சித் தலைமையகத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகின்றது.

இன்று காலை முதல் பெரும்பாலானவர்கள் அலுவலகத்தின் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வருவதால் அங்கு வாக்குவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

கூட்டரசுப் பிரதேச மாநிலத் தலைவர் பதவியில் இருந்து டத்தோ சரவணன் நேற்று நீக்கம் செய்யப்பட்டதால், இன்று மதியம் 1 மணியளவில் அவர் தனது ஆதரவாளர்களுடன் பத்திரிகையாளர்களை சந்திக்க உள்ளார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், அங்கு மஇகா தலைமையால் அமர்த்தப்பட்டிருக்கும் பாதுகாவலர்கள் பொதுமக்கள் பலரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகின்றது.

மஇகா தலைமையகத்தின் தற்போதைய நிலவரங்கள் உங்கள் பார்வைக்கு:-

MIC

MIC 2

MIC 1