Home தொழில் நுட்பம் நான்காம் காலாண்டில் ஆப்பிள் வர்த்தக சாதனை!

நான்காம் காலாண்டில் ஆப்பிள் வர்த்தக சாதனை!

595
0
SHARE
Ad

iphone-6-plus-large-handகோலாலம்பூர், ஜனவரி 29 – உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், கடந்த 2014-ம் ஆண்டில் மற்ற நிறுவனங்களுக்கு சவால் விடும் விதமாக மிகப் பெரும் வர்த்தக சாதனையை நிகழ்த்தி உள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ், பயனர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றன. சீனாவில் மட்டும் இந்த ஐபோன்களின் விற்பனை வழக்கத்தை விட 70 சதவீதம் அதிகரித்தது.

இதன் காரணமாக மற்ற முன்னணி நிறுவனங்களான சாம்சுங் மற்றும் சியாவுமி சற்றே சரிவை சந்தித்தன. ஆப்பிள் நிறுவனம் ஆசிய அளவில் சீனாவிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க காரணம்.

#TamilSchoolmychoice

சீனாவில், ஆப்பிள் தயாரிப்புகளின் விற்பனை, அமெரிக்காவை விட அதிகமாகும். அங்கு சியாவுமியின் வருகைக்குப் பிறகு சாம்சுங் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு சற்றே பின்னடைவு ஏற்பட்டது.

எனினும், ஆப்பிளின் ஐபோன் 6, சியாவுமி ஏற்படுத்திய வீழ்ச்சியை ஒரே காலாண்டில் சரி செய்துள்ளது. இதன் மூலம் சீனாவில், ஆப்பிள் மீண்டும் தனது வெற்றிக் கொடியை நாட்டி உள்ளது.

ஐபோன் 6 வெளியீட்டிற்குப் பிறகு, ஆப்பிள் நிறுவனத்தின் வருவாய் 74.6 பில்லியன் டாலர்கள் என்ற அளவில் உயர்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இது அதற்கு முந்தைய ஆண்டை விட, 18 பில்லியன் டாலர்கள் அதிகமாகும். இந்த அளவிற்கான இலாப அதிகரிப்பை, இதுவரை எந்தவொரு தொழில்நுட்ப நிறுவனமும் எட்டவில்லை என்று வர்த்தக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

iphone6ஆப்பிளின் நான்காம் காலாண்டு முடிவுகள் வெளியான நிலையில், பங்குசந்தையில் அந்நிறுவனத்தின் மதிப்பு 5 சதவீதம் அதிகரித்து, 114.90 டாலர்கள் என்ற அளவில் உயர்ந்துள்ளது.

ஐபோன் 6 வெளியான போது, ஒரு சிலர் தாங்கள் வாங்கிய ஐபோன் 6 திறன்பேசிகள் வளைவதாக, யூ-டியூப் உள்ளிட்ட பல்வேறு சமூக ஊடகங்களில் காணொளிகளை வெளியிட்டனர்.

எனினும், அதுபோன்ற எந்தவொரு வதந்திகளும் ஐபோன் 6-ன் வளர்ச்சியை பாதிக்கவில்லை. மாறாக உலக அளவில் இதுவரை 74.5 மில்லியன் ஐபோன் 6 திறன்பேசிகள் விற்பனையாகியுள்ளன.

அடுத்ததாக ஆப்பிள், வரும் ஏப்ரல் மாதத்தில், ஆப்பிள் திறன்கடிகாரங்களை வெளியிட தீர்மானித்துள்ளதாக ஆருடங்கள் கூறப்படுகின்றன. அதன் காரணமாக தற்போது அனைவரின் கவனமும் ஆப்பிள் மீது திரும்பி உள்ளது குறிப்பிடத்தது.