Home உலகம் ஐ.நா.பாதுகாப்பு ஆணையத்தில் இந்தியா அங்கம் வகிக்க பாகிஸ்தான் எதிர்ப்பு!

ஐ.நா.பாதுகாப்பு ஆணையத்தில் இந்தியா அங்கம் வகிக்க பாகிஸ்தான் எதிர்ப்பு!

544
0
SHARE
Ad

Indiaஇஸ்லாமாபாத், ஜனவரி 29 – அமெரிக்க அதிபர் ஒபாமா இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள, 3 நாட்கள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்திருந்தார்.

இந்தியாவில் ஒபாமாவிற்கும் அவரது மனைவி மிச்செலுக்கும் மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. குடியரசு தின விழாவில் இந்தியாவின் இராணுவ அணிவகுப்பை பார்வையிட்ட ஒபாமா, இராணுவ அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில்,

“ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு ஆணையத்தில் இந்தியாவிற்கு நிரந்தர உறுப்பினராக அங்கம் வகிக்க அமெரிக்கா ஆதரவளிக்கும்” என்று கூறினார்.

#TamilSchoolmychoice

ஒபாமாவின் இந்த அறிவிப்பிற்கு, இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.  இந்தியாவிற்கு இதுபோன்றதொரு ஆதரவினை அமெரிக்கா அளித்தால்,

இந்தியா , தென் கிழக்கு ஆசிய வட்டாரத்தில் அமைதியையும், இறையாண்மையையும் சீர் குலைத்து விடும் என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் கூறும்போது,

‘‘இந்தியா–பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்படாமல், இந்தியாவிற்கு ஐ.நா.பாதுகாப்பு ஆணையத்தில் நிரந்தர இடம் கிடைக்க அமெரிக்கா ஆதரவு அளிக்க கூடாது’’ என்று தெரிவித்துள்ளார்.