Home உலகம் சிறிசேனா அரசால் எனக்கு நிம்மதி இல்லை – ராஜபக்சே! 

சிறிசேனா அரசால் எனக்கு நிம்மதி இல்லை – ராஜபக்சே! 

667
0
SHARE
Ad

srishanaகொழும்பு, ஜனவரி 29 – இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே மீது தொடர்ச்சியான ஊழல் புகார்கள் வந்து வண்ணம் உள்ளன. கடும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ள அவர், புதிய அரசு தம்மை நிம்மதியாக வாழ விடவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சமீபத்தில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் மஹிந்த ராஜபக்சே, மைத்ரிபால சிறிசேனாவிடம் படுதோல்வி அடைந்தார். ராஜபக்சே பதவி விலகிய நாள் முதல், சீனா வழங்கிய நிதியுதவியில் ஊழல், இலங்கை அரசு நிதியத்தில் 13000 கோடி ஊழல் என அடுக்கடுக்கான புகார்கள் அவர் மீதும் அவரின் குடும்பத்தார் மீது கூறப்பட்டுள்ளன.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக அவரின் மனைவி மீது சட்டத்திற்கு புறம்பாக அரசு கருவூலத்தில் இருந்து 100 கிலோ தங்கத்தை விற்பதற்கு முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில், ராஜபக்சே வெளியிட்டுள்ள அறிக்கையில்,

#TamilSchoolmychoice

“சமீப காலமாக ஊடகங்கள், என்னைப் பற்றியும், எனது குடும்பத்தார் பற்றியும் மிக மோசமான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. கடந்த 9-ஆம் தேதி அதிகாலையில், அலரி மாளிகையில் இராணுவ சூழ்ச்சித் திட்டங்கள் நான் செய்ததாக கூறப்படுவது உண்மைக்கு புறம்பானது”

“தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே சுமூகமான முறையில் நான் அலரி மாளிகையை விட்டு வெளியேறினேன். தேர்தல் காலத்திலும் அதன் பின்னரும் எனது குடும்பத்தினருக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் இடம்பெற்று வருகின்றன”.

“பதவியில் இருந்து விலகிய பின்னர் ஓய்வாகவும், நிம்மதியாகவும் என்னால் இருக்க முடியவில்லை. இதற்கு புதிய அரசே முழுகாரணம். எனது மனைவி மீதும் தங்கம் கடத்தியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டிற்கு காவல்துறையினர் தக்க பதிலளித்துள்ளனர்”.

“அதனால் அது பற்றி பேசப் போவதில்லை. எனது அரசு ஊழல் செய்ததாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் இல்லை” என்றும் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.