Home கலை உலகம் மிஸ் யுனிவர்ஸ் மாலை நேர ஆடை அணிவகுப்பு – தொகுப்பு 3 (படக் காட்சிகள்)

மிஸ் யுனிவர்ஸ் மாலை நேர ஆடை அணிவகுப்பு – தொகுப்பு 3 (படக் காட்சிகள்)

867
0
SHARE
Ad

மியாமி, ஜனவரி 30 – கடந்த திங்கட்கிழமை நடந்து முடிந்த 63வது மிஸ் யுனிவர்ஸ் உலக அழகிப் போட்டியில் கொலம்பியா நாட்டு அழகி பவுலினா வேகா வாகை சூடினார்.

அந்தப் போட்டியில் கலந்து கொண்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அழகிகள் மாலை வேளைகளில் அணிந்து கொள்ளும் ஆடை அணிகலன்களுடன் மேடையில் அழகு பவனி வந்து பார்வையாளர்களையும், நீதிபதிகளையும் கவர்ந்தனர்.

அவர்களின் அழகிய தோற்றங்களின் சில படக் காட்சிகள் இவை:-

#TamilSchoolmychoice

Miss Universe Pageant in Miami, Florida

மிஸ் யுனிவர்ஸ் ஆக வாகை சூடிய கொலம்பிய நாட்டு அழகி பவுலினா வேகா வெள்ளி நிற ஆடை அணிந்து பவனி வந்தார்.

Miss Universe Pageant in Miami, Florida

சிவப்பு வண்ணத்தில் தரையைக் கூட்டும் ஆடையுடன் இங்கே பவனி வருபவர் அமெரிக்க நாட்டைப் பிரதிநிதிக்கும் அழகி நியா சான்ஜஸ் (Nia Sanchez)

The 63rd Annual Miss Universe pageant

எத்தனையாவதாக வந்தாலும் நமது சொந்த மலேசிய நாட்டு அழகியை மறந்துவிட முடியுமா? கறுப்பு வண்ண  ஆடையில் வலம் வந்த மலேசிய நாட்டு அழகி சப்ரினா பெனீத் (Sabrina Beneett)

Miss Universe Pageant in Miami, Florida

நெதர்லாந்து நாட்டு அழகி யாஸ்மின் வெர்ஹெய்ஜன் (Yasmin Verheijen) மஞ்சள் நிற ஆடையோடு வலம் வந்து  நீதிபதிகளை அசத்தினார்.

Miss Universe Pageant in Miami, Florida

உடலைக் கவ்விப் பிடிக்கும் சிவப்பு வண்ண ஆடையில் நீதிபதிகளின் மனங்களை கவ்விப் பிடிக்க நடைபோடும் வெனிசூலா நாட்டு அழகி மிக்பெலிஸ் லைனட் காஸ்டெல்லானோஸ் (Migbelis Lynette Castellanos)

The 63rd Annual Miss Universe beauty pageant

ஸ்பெயின் நாட்டு அழகி டிசையர் கொர்டிரோ ஃபெர்ரர் (Desire Cordero Ferrer)

The 63rd Annual Miss Universe pageant

கொரிய நாட்டு அழகி யூ யெபின் (Yoo Yebin) காலழகைக் காட்டும் உடையலங்காரத்தோடு பவனி வந்த காட்சி

Miss Universe finalists

நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளின் அழகிகள் கடும் போட்டியில் இறங்க, இறுதிச் சுற்று வரை தாக்குப் பிடித்து வந்தவர்கள் இவர்கள்தான். (இடமிருந்து வலமாக) கொலம்பியா நாட்டு அழகி பவுலினா வேகா (Paulina Vega) ஐமைக்கா நாட்டு அழகி காச்சி ஃபென்னல் (Kaci Fennell) உக்ரேன் நாட்டு அழகி டையானா ஹார்குஷா (Diana Harkusha) நெதர்லாந்து நாட்டு அழகி யாஸ்மின் வெர்ஹெய்ஜென் (Yasmin Verheijen) அமெரிக்க நாட்டு அழகி நியா சான்ஜஸ் (NIA Sanchez)

படங்கள்: EPA