Home நாடு இன்று பிரதமருடன் மஇகா தலைவர்கள் சந்திப்பா?

இன்று பிரதமருடன் மஇகா தலைவர்கள் சந்திப்பா?

525
0
SHARE
Ad

MIC logoகோலாலம்பூர், ஜனவரி 30 – மஇகா பிரச்சனையில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நேரடியாகத் தலையிட்டு தீர்வு காண்பார் என கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் நேற்று அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, இன்று பிரதமர் மஇகாவின் உயர் மட்டத் தலைவர்களைச் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்று, தலைநகர் மலாயாப் பல்கலைக் கழகத்தில் நடைபெறும் 9வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் திறந்து வைக்க பிரதமர் நஜிப் காலை 10.00 மணியளவில் வருகை தருகின்றார்.

#TamilSchoolmychoice

இந்த நிகழ்வில் மஇகாவின் முக்கியத் தலைவர்களும் கலந்து சிறப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மலாயாப் பல்கலைக் கழக வளாகத்திலேயே நஜிப் மஇகா தலைவர்களைச் சந்தித்து பேச்சு வார்த்தைகள் நடத்தக் கூடும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகின்றது.

அப்படி மலாயாப் பல்கலைக் கழக வளாகத்தில் சந்திப்பு நடைபெறாவிட்டால், பின்னர் ஒரு நேரத்தில் தனது அலுவலகத்திலோ, இல்லத்திலோ நஜிப், தனியாக, மஇகாவின் முக்கிய தலைவர்களைச் சந்தித்து, மஇகா பிரச்சனைக்குத் தீர்வு காண்பார் என்றும், அந்த சந்திப்பு இன்றே நடைபெறக் கூடிய சாத்தியங்கள் அதிகம் என்றும் மஇகா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.