Home இந்தியா எத்தனை வழக்குகள் தொடர்ந்தாலும் சந்திப்பேன்: விஜயகாந்த்

எத்தனை வழக்குகள் தொடர்ந்தாலும் சந்திப்பேன்: விஜயகாந்த்

800
0
SHARE
Ad

vijaykanth-slidderதிண்டுக்கல், மார்ச் 1- மக்கள் பிரச்னைகளைப் பற்றி பேசியதற்காக என்மீது வழக்குகள் தொடரப்படுகின்றன.

எத்தனை வழக்குகள் தொடர்ந்தாலும் சந்திப்பேன் என திண்டுக்கல் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜரான தே.மு.தி.க. தலைவரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் தெரிவித்தார்.

திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், தமிழக அரசைப் பற்றி அவதூறாகப் பேசியதாக விஜயகாந்த் மீது, திண்டுக்கல் நீதிமன்றத்தில் அரசு வழக்குரைஞர் எஸ். ஜெயபாலன் வழக்குத் தொடர்ந்தார்.

#TamilSchoolmychoice

இந்த வழக்கு விசாரணைக்காக திண்டுக்கல் நீதிமன்றத்தில் முதன்மை நீதிபதி பாலசுந்தரகுமார் முன்னிலையில், விஜயகாந்த் வியாழக்கிழமை நேரில் ஆஜரானார்.

விசாரணைக்குப் பிறகு, வழக்கை மார்ச் 27 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

நீதிமன்றத்திலிருந்து வெளியேவந்த விஜயகாந்த், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:-

அதிமுக அரசு நீதிமன்றங்களில் வழக்குப் போடுவதை கொள்கையாகவே கடைப்பிடித்து வருகிறது. என்மீது எத்தனை வழக்குகள் தொடர்ந்தாலும், அதனைச் சந்திக்கத் தயாராக இருக்கிறேன்.

மக்களைப் பாதுகாப்பதற்குத்தான் அரசு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதனைத் தவிர்த்து, அண்டை மாநிலங்கள் மீது வழக்குத் தொடுப்பதற்கு அல்ல. சுமூகப் பேச்சுவார்த்தை மூலமே பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்றார்.