Home கலை உலகம் கண்ணா லட்டு தின்ன ஆசையா பட விவகாரம்: சமரச தீர்வு மையத்தை அணுகி தீர்வு காண...

கண்ணா லட்டு தின்ன ஆசையா பட விவகாரம்: சமரச தீர்வு மையத்தை அணுகி தீர்வு காண உத்தரவு

783
0
SHARE
Ad

kanna-laddu-sliderசென்னை, மார்ச் 1- கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படக் கதை உரிமை தொடர்பாக எழுந்துள்ள பிரச்னையை சமரச தீர்வு மையத்தை அணுகி சுமுகமாகத் தீர்த்துக் கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக நடிகர் கே. பாக்கியராஜ் மனு தாக்கல் செய்திருந்தார். “இன்று போய் நாளை வா’ திரைப்படத்துக்கான காப்புரிமை என்னிடம் உள்ளது.

ஆனால் எனது ஒப்புதல் பெறாமல் அதே கதையைப் பயன்படுத்தி கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர்.

#TamilSchoolmychoice

இது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் பாக்கியராஜ் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி என். கிருபாகரன் முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த வழக்கில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரின் ஒப்புதலோடு இந்த விவகாரம் சமரச தீர்வு மையத்துக்கு அனுப்பப்படுகிறது. ஆகவே, அம்மையத்தை அணுகி சம்பந்தப்பட்டவர்கள் பிரச்னைக்கு சுமுக தீர்வு காண வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.