கோலாலம்பூர், ஜனவரி 31 – நேற்று 9வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைத் தொடக்கி வைத்து உரையாற்ற வந்த பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், முதல் கட்டமாக மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் டத்தோஸ்ரீ ச.சாமிவேலு குறித்து சில பாராட்டுகளைக் கூறினார்.
“சாமிவேலு எங்களின் அரசாங்கத்தில் முப்பதாண்டுகளுக்கும் மேலாக, சிறப்பான சேவையாற்றியவர். இந்த மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுத் தலைவராக இருந்தும் சிறப்பாக ஏற்பாடுகளைச் செய்திருக்கின்றார்” என்று பாராட்டினார்.
“ஆனால், என்னவோ தெரியவில்லை. அவருக்கு வயதாக, வயதாக அவரது தலைமுடி மட்டும் அடர்த்தியாகிக் கொண்டே போகின்றது. அந்த மர்மம்தான் எனக்கு விளங்கவில்லை. எனக்கும் அதே போல் தலைமுடி அடர்த்தியாக இருந்தால் நன்றாக இருக்கும்” என சிரித்துக் கொண்டே நகைச்சுவையாகக் கூறினார்.
அரங்கமே சிரிப்பில் அதிர, அதன் பின்னரே தனது அதிகாரபூர்வ உரையை வழங்கத் தொடங்கினார் நஜிப்.