மாநாட்டின் இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமையன்று மலேசிய நாட்டின் பிரபல கவிஞரும் ஆய்வாளருமான முனைவர் முரசு நெடுமாறன் (படம்) “தமிழ்ப் பேச்சு மொழிச் சீர்கேடுகளும் தீர்வும்” என்ற தலைப்பிலான ஆய்வுக் கட்டுரையை ஆய்வரங்கம் ஒன்றில் சமர்ப்பித்தார்.
தனது ஆய்வில் முரசு நெடுமாறன் “தமிழ் பேச்சு மொழி சீர்மைக்குரிய பரிந்துரைகள்” என சில பரிந்துரைகளையும் தமது ஆய்வுக் கட்டுரையில் முன்மொழிந்திருந்தார்.
அவற்றில் சில:
- தமிழ் உச்சரிப்பை மாணவர்களுக்கு சரியான முறையில் கற்பித்தல்; வகுப்பறையில் சரளமாக, உரக்க வாசிக்கச் செய்தல்
- ஆசிரியர்கள் உச்சரிப்புகளை சரியாக அறிந்து கொள்ளுதல்
- ஊடகங்களில் அறிவிப்பு முதலாய பணிகளுக்கு வாய்மொழித் தேர்வு மூலம் தகுதி வாய்ந்தவர்களையே தேர்ந்தெடுத்தல்
- ஊடகங்களில் நடக்கும் உச்சரிப்புக் கொலைகளை சுட்டிக் காட்டி இதழ்கள் துணிந்து விமர்சனங்களை எழுதுதல்
- வீட்டில் பெற்றோர்கள் பிள்ளைகளுடன் சரளமாகப்பேசுவது, வாய்விட்டு படிக்கத் தூண்டுதல்
- இயக்கங்கள் சொற்பயிற்சி அரங்குகளை நடத்துவது
- தமிழின் ஒலிச் சீர்மையைக் காப்பாற்ற உச்சரிப்புகளுக்கான தொண்டூழிய முறையிலான அமைப்புகளை ஏற்படுத்துதல்
- தமிழுக்கு ஊறு நேர்ந்தால் போராட உணர்வும் துணிவும் கொண்ட மறவர் படை உருவாக்கி செயலில் இறங்குதல்
ஆய்வரங்கில் தனது கட்டுரை சமர்ப்பிக்கப்பட்டவுடன், கலந்து கொண்டவர்கள் எழுப்பிய சில சந்தேகங்களுக்கும், வினாக்களுக்கும் முரசு நெடுமாறன் விளக்கமும் அளித்தார்.
Comments