Home நாடு பத்துமலை மின்சாரத் தடையால், அஸ்மின் அலி நிகழ்வு நடைபெறவில்லை!

பத்துமலை மின்சாரத் தடையால், அஸ்மின் அலி நிகழ்வு நடைபெறவில்லை!

568
0
SHARE
Ad

azmin ali mகோலாலம்பூர், பிப்ரவரி 3 – நேற்றிரவு பத்துமலை வளாகத்தில் ஏற்பட்ட மின்சாரத் தடையால், சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலியின் (படம்) பத்துமலை வருகையும், அவர் கலந்து கொள்ள வேண்டியிருந்த நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டது.

நேற்றிரவு 8.15 மணியளவில் பத்துமலை தைப்பூச விழாவில் பங்கு பெறுவதற்கு அஸ்மின் அலி வருகை தந்திருந்தார். இருப்பினும், அவர் வந்தடைந்த சிறிது நேரத்தில் மின்சாரத் தடையினால் பத்துமலை இருளில் மூழ்கியதால், அவரது நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டது.

பின்னர் அருகில் மற்றொரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அஸ்மின் அலி புறப்பட்டுச் சென்றார்.

#TamilSchoolmychoice

இது குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அஸ்மின் அலி, “இது நமது கட்டுப்பாட்டுக்கு மீறிய சம்பவம். மின்சாரத் தடை ஏற்படும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இருப்பினும் மின்சாரத் தடையினால் தைப்பூசக் கொண்டாட்டங்களின் உற்சாகம் சற்றும் குறையப் போவதில்லை” என்று நம்பிக்கை தெரிவித்தார்