Home இந்தியா அமைச்சர், அதிகாரிகளை தினமும் மாற்றுவதுதான் அரசின் திட்டமா? திண்டுக்கல்லில் விஜயகாந்த் கேள்வி

அமைச்சர், அதிகாரிகளை தினமும் மாற்றுவதுதான் அரசின் திட்டமா? திண்டுக்கல்லில் விஜயகாந்த் கேள்வி

699
0
SHARE
Ad
vjayakanth-sliderதிண்டுக்கல், மார்ச்.1- அமைச்சர்களை மட்டுமல்ல, அதிகாரிகளை தினமும் மாற்றுவதையே தமிழக அரசு திட்டமாக கொண்டுள்ளது என விஜயகாந்த் கூறினார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திண்டுக்கல்லில் நடந்த தேமுதிக பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறு பேசியதாக விஜயகாந்த் மீது அரசு வக்கீல் ஜெயபால் டிசம்பர் 15ல் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கு தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று திண்டுக்கல் மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் ஆஜரானார்.

அவரது சார்பில் வக்கீல் பாக்ய செல்வராஜ், அரசக்குமார், லட்சுமணன் ஆகியோர் ஆஜராகினர். வழக்கின் நகல் விஜயகாந்திடம் வழங்கப்பட்டது.

விசாரணையை மார்ச் 27ம் தேதிக்கு நீதிபதி பாலசுந்தரகுமார் ஒத்திவைத்தார். பின்னர் விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-
மக்களுக்கு எவ்வித வளர்ச்சி திட்டங்களையும் செய்யாமல் அமைச்சரவையை மாற்றுவதையே பெரிய திட்டமாக தமிழக அரசு கொண்டுள்ளது. எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் சந்திக்க தயாராக உள்ளோம்.