Home உலகம் ஜப்பானிய வங்கிகளில் இனி மனிதர்களுக்கு பதில் எந்திரன்!

ஜப்பானிய வங்கிகளில் இனி மனிதர்களுக்கு பதில் எந்திரன்!

544
0
SHARE
Ad

SoftBank_pepperJPGடோக்கியோ, பிப்ரவரி 6 – மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் உட்பட பல்வேறு நிபுணர்களும், விஞ்ஞானிகளும் அச்சம் தெரிவித்த சூழல் தற்போது ஜப்பானில் உருவாகத் தொடங்கியுள்ளது.

மனித உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் ரோபோக்களை, வங்கி பணிகளுக்கு அமர்த்த இருப்பதாக அந்நாட்டின் மிகப் பெரிய வங்கியான ‘மிட்சுபிஷி யுஎப்ஜே’ (Mitsubishi UFJ) தெரிவித்துள்ளது.

‘செயற்கை நுண்ணறிவினை’ (Artificial Intelligence) இயந்திர மனிதர்களுக்கு,புகுத்தாத வரை உலகத்திற்கு எந்தவொரு ஆபத்தும் இல்லை.

#TamilSchoolmychoice

இயந்திரங்களுக்கு செயற்கை நுண்ணறிவினை புகுத்தி தானாக சிந்திக்க வைக்கும் பொழுது, அவை அடுத்தகட்ட நகர்தலுக்கு ஆயத்தமாகி விடும். அதன் பின்னர், அதனை யாராலும் கட்டுப்படுத்த இயலாது என பில்கேட்ஸ் கடந்த வாரம் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் மிட்சுபிஷி யுஎப்ஜே நிறுவனம், மனித உணர்வுகளைப் புரிந்து கொள்ளக் கூடிய ரோபோக்களை, பிரெஞ்சு நிறுவனமான ‘அல்டிபெரான் ரோபோடிக்ஸ்’ (Aldebaran Robotics) மூலம் வடிவமைத்துள்ளது.

Untitled‘நாவ்’ (Nao) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோக்கள், 19 மொழிகளை புரிந்து கொண்டு அவற்றிற்கு பதில் அளிக்கும் வகையில் நிரலாக்கம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இவை, தனது  தலையில் உள்ள இரட்டை கேமரா மூலம் மனிதர்களின் முகபாவனைகளையும், ‘மைக்ரோபோன்’ (Microphone) மூலமாக நமது குரலில் உள்ள உணர்ச்சிகளையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் என்று கூறப்படுகிறது.

நாவ் தற்போது தனது சோதனைக் காலத்தை வெற்றிகரமாக முடித்துள்ள நிலையில், மிட்சுபிஷி வரும் ஏப்ரல் மாதம் தனது இரண்டு வங்கிக் கிளைகளில் இந்த ரோபோவை பணியில் அமர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது.

இந்த புதிய திட்டம் வெற்றி பெற்றால், தனது அனைத்து கிளைகளிலும் மனிதர்களுக்கு பதிலாக ரோரோபோக்களையே பணி அமர்த்த இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.