Home இந்தியா ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு: சாமிக்கு சாதகமான தீர்ப்பு!

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு: சாமிக்கு சாதகமான தீர்ப்பு!

475
0
SHARE
Ad

samy_jeyalaitha_002கர்நாடக, பிப்ரவரி 6 – ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் பாஜக தலைவர் சுப்பிரமணிய சாமிக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்துள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அதிமுக பொதுசெயலர் ஜெயலலிதாவுக்கு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது.

இதனையடுத்து, கர்நாடக சிறப்பு நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில் தங்களையும் 3-வது சாட்சியாக சேர்க்க வேண்டும் , என தி.மு.க., தரப்பில் அன்பழகனும், சுப்பிரமணியசுவாமியும் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுகள் மீதான விசாரணை சிறப்பு நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடந்தது. மனுவை விசாரித்த நீதிபதி , திமுக மனுவை தள்ளுபடி செய்தார். அதே நேரத்தில் சுப்பிரமணியசாமிக்கு நீதிமன்றம் சில வழிகாட்டி நெறிமுறைகளை தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

இதன்படி சாமி அரசு வழக்கறிஞர் பவானிசிங்கிற்கு தேவையான உதவிகள் செய்யலாம். அவரது தரப்பு விசயங்களை எழுத்துப்பூர்வமாக அளிக்கலாம். ஆனால் வழக்கில் ஆஜராகி வாதிட அனுமதி இல்லை என்று நீதிபதி கூறியுள்ளார்.