Home கலை உலகம் ஈரானிய படத்திற்காக உலகப்புகழ் பெற்ற இசைக்குழுவுடன் கைகோர்த்த ஏ.ஆர்.ரஹ்மான்!

ஈரானிய படத்திற்காக உலகப்புகழ் பெற்ற இசைக்குழுவுடன் கைகோர்த்த ஏ.ஆர்.ரஹ்மான்!

701
0
SHARE
Ad

ar-rahman-storyஈரான், பிப்ரவரி 6 – ஈரானிய சினிமாவை உலகளவில் பேச வைத்த படம் ‘சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’. இப்படத்தை மஜித் மஜிதி என்பவர் இயக்கியிருந்தார். இப்படம் 1997-ல் வெளிவந்து உலக ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

ஒரு ஜோடி ஷூவையும் இரண்டு சிறு குழந்தைகளையும் வைத்துக்கொண்டு உலக ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார் இயக்குனர். உலகப் பட விழாக்களில் நூற்றுக்கணக்கான விருதுகளை குவித்த இந்தப் படம் இப்போதும் உலக சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

இப்படம் போல் ‘த கலர் ஆப் பாரடைஸ்’, த சாங் ஆப் ஸ்பாரோ’ ஆகிய படங்கள் அன்பை பேசும் தரமான திரைப்படங்களையும் அவர் அளித்தார். அப்படிப்பட்ட இயக்குனருடன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்து பணியாற்றி வருகிறார்.

#TamilSchoolmychoice

இந்த இணைப்பு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாக மஜித் மஜிதி இயக்கி வரும் இந்த ஈரானியப் படத்தின் இசையமைப்புப் பணிகளுக்காக ஏ.ஆர்.ரஹ்மான் அங்கேயே தங்கிவிட்டாராம்.

இப்படத்திற்காக உலக புகழ் பெற்ற பாலஸ்தீன இசை குழுவினரான லி ட்ரையோ ஜோப்ரானுடன் ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்து பணியாற்றி வருகிறார்.

லி ட்ரையோ ஜோப்ரான் குழுவின் சகோதர்களான சமீர், விஷ்ஷம், அட்னன் ஜோப்ரான் ஆகியோர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து விறுவிறுப்பாக இசையமைத்து வருகிறார்கள்.

உலக புகழ் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான், மஜித் மஜிதி மற்றும் லி ட்ரையோ ஜோப்ரான் ஆகியோர் இணைந்து பணியாற்றுவதால் இப்படத்தை உலக சினிமா ரசிகர்கள் அனைவரும் எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார்கள்.