Home தொழில் நுட்பம் ஐஒஎஸ் கருவிகளுக்கு மால்வேர் ஆபத்து!     

ஐஒஎஸ் கருவிகளுக்கு மால்வேர் ஆபத்து!     

516
0
SHARE
Ad

Appleகோலாலம்பூர், பிப்ரவரி 10 – ஆப்பிள் கருவிகளுக்கு வைரஸ், மால்வேர் போன்ற நிரல்களால் ஆபத்து ஏற்படுவது மிக அரிதாக நடைபெறும் ஒன்று. ஒருவேளை மால்வேர் அச்சுறுத்தல் நடைபெற வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கப்பட்டால், பயனர்கள் கவனக்குறைவாக இருந்து விடக் கூடாது. XAgent என்ற புதிய மால்வேர், தற்போது ஆப்பிள் கருவிகளில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அண்டி வைரஸ் மேம்பாட்டு நிறுவனமான ‘டிரெண்ட் மைக்ரோ’ (Trend Micro) வெளியிட்டுள்ள அறிக்கையில், “XAgent என்ற புதிய மால்வேர், ஐஒஎஸ் கருவிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இவை கருவிகளில் ஊடுருவி, நமது தகவல்களையும், தரவுகளையும் பிறருக்கு அனுப்பவல்லது.”

“பயனர்களின் திறன்பேசிகளில் உள்ள நினைவக அமைப்பில் இருக்கும் புகைப் படங்கள், செயலிகள், பயனர்களின் புவிசார் தகவல்கள் போன்றவற்றை இந்த நிரல்களால் தகவல் திருடர்களுக்கு மிக எளிதாக அனுப்ப முடியும். ஐஒஎஸ் 7 மற்றும் 8 இயங்குதளங்களைக் கொண்டுள்ள கருவிகளை குறி வைத்து இந்த நிரல்கள் உருவாக்கப்பட்டுள்ளதால், பயனர்கள் அங்கீகரிக்கப்படாத தளங்களை பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது.”

#TamilSchoolmychoice

“ஐஒஎஸ் 8-ஐ பொருத்தவரை இந்த மால்வேர் தனிச்சையாக செயல்படாது. ஆனால் ஐஒஎஸ் 7-களில் இவை தனிச்சையாக செயல்படும். எனவே பயனர்கள் தங்கள் ஆப்பிள் சாதனங்களை பாதுகாப்பதில் கவனமாக இருக்க வேண்டும்” என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.