Home இந்தியா தோல்விக்குப் பொறுப்பு ஏற்கிறேன் – கிரண் பேடி

தோல்விக்குப் பொறுப்பு ஏற்கிறேன் – கிரண் பேடி

480
0
SHARE
Ad

kiranபுதுடெல்லி, பிப்ரவரி 10 – டெல்லி சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பெரும் தோல்வியை சந்தித்துள்ள நிலையில், இத்தோல்விக்கு தாம் பொறுப்பு ஏற்பதாக அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் கிரண் பேடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடந்து முடிந்த தேர்தலானது எனக்கும் ஜெக்ரிவாலுக்கும் இடையேயான போட்டி என்றார்.

“இந்த போட்டியில் ஒருவர் மட்டுமே வெற்றி பெற முடியும். நாங்கள் இருவரும் போட்டியில் பங்கேற்றோம். ஆனால் இருவர் கலந்து கொண்ட நிலையில் ஒருவர் மட்டும்தானே வெற்றிபெற முடியும்?” என்றார் கிரண் பேடி.

#TamilSchoolmychoice

இந்தத் தேர்தல் பிரதமர் மோடியின் அரசு மீதான பொதுவாக்கெடுப்பு என்று ஊடகங்களில் சித்தரிக்கப்படுவதை ஏற்க மறுத்த அவர், கெஜ்ரிவாலுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவிப்பதாகக் கூறினார்.

“ஒருவேளை பாஜக வெற்றி பெற்றிருந்தால் இதை கூட்டு வெற்றியாகக் கருதியிருக்கலாம். எனினும், கட்சி தோல்வி அடைந்தால் அது தனிநபர் பொறுப்பாகிறது. அந்த வகையில் இத்தோல்விக்கு நான் பொறுப்பு ஏற்றுக் கொள்கிறேன். காவல்துறை அதிகாரியாக இருந்தபோதும் தோல்வியை சந்தித்து இருக்கிறேன்,” என்றார் கிரண் பேடி.

இதற்கிடையே தனது டிவிட்டர் பக்கத்திலும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கிரண் வாழ்த்து கூறியுள்ளார்.

“இத்தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் முழு மதிப்பெண்களையும் பெற்றுள்ளார். டெல்லி புதிய உச்சத்தை அடையும் வகையில் அவர் செயல்பட வேண்டும். டெல்லி மாநிலத்தை உலகத் தரமுள்ள நகரமாக உருவாக்க வேண்டும்,” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.