Home நாடு “சில வருடங்களுக்குப் பிறகு சந்திக்கிறேன்” – சோகத்துடன் பிரியா விடை பெற்ற அன்வார்!

“சில வருடங்களுக்குப் பிறகு சந்திக்கிறேன்” – சோகத்துடன் பிரியா விடை பெற்ற அன்வார்!

443
0
SHARE
Ad

10959376_10153202408071840_4243014632860833220_nபுத்ரா ஜெயா, பிப்ரவரி 10 – “சில வருடங்களுக்குப் பிறகு சந்திக்கிறேன்” என்று சுங்கை பூலோ சிறைக்கு செல்லும் முன், அன்வார் தனது குடும்பத்தினரை கட்டித் தழுவி கூறியுள்ளார். இதைக் கண்ட அன்வார் ஆதரவாளர்கள் பலரும் கண்ணீர் சிந்தியதாகக் கூறப்படுகின்றது.

பின்னர் தனது பேரனிடம் வந்த அன்வார், “நான் என்ன கூறியுள்ளேன் என்பதை நினைவில் வைத்துக் கொள், நீ ஒழுங்காக பள்ளிக்கு செல்ல வேண்டும்” என்று அறிவுரை கூறியுள்ளார்.

அதன் பின்னர், தனது மனைவி வான் அசிசாவிடமும், மூத்த மகள் நூருல் இசாவிடமும் அன்வார் பிரியா விடை பெற்றார். இந்த காட்சியைக் கண்ட அன்வாரின் மாமனார் வான் இஸ்மாயில் வான் மாஹ்முட்டும் கண்ணீர் சிந்தியுள்ளார்.

#TamilSchoolmychoice

தனது தீர்ப்பு குறித்து டிவிட்டரில் கருத்துத் தெரிவித்துள்ள அன்வார், “அல்லா தான் எனக்கு சாட்சி. நான் அமைதியாக இருக்கப் போவதில்லை. நான் என்றும் சரணடையமாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.